Tuesday, June 12, 2018

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 18


 *பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள்.*

*தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறி விடக் கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.*

*எனவே அவர் தர்மருடன் மலை நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார்.*

*அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.*

*அவ்வீட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள்.*

*தர்மர் அவளிடம், "தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்து விட்டீர்களே,'' என" ஆச்சரியமாகக் கேட்டார்.*

*அதற்கு அந்த பெண்மணி, "எங்கள் நாட்டில் ஒரு முறை பயன் படுத்திய பொருளை மறு முறை பயன் படுத்துவதில்லை, என அலட்சியமாக சொல்லி விட்டு போய் விட்டாள்.*

*அந் நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன். அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர்.*

*கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி, "இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்,'' என்றார்.*

*மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை.*

*"கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை. எல்லோரிடமும் செல்வம் குவிந்து கிடக்கிறது. எனவே "பிச்சை' என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் "தர்மம்' என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை. எனவே அவர்கள் தானம் பெறவேண்டிய அவசியமும் இல்லை. இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவேதான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர்.* 

*இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப் பார்க்க வெட்கப் படுகிறேன்,'' என்றார்.*

*தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலை குனிந்தார் தர்மராஜா.*

*தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலை குனியத் தான் வேண்டும்.*

*"தர்மம் பெறுவதும் பிச்சை எடுப்பது தான்*

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 17

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....

மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை

விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக்

கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....

தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....

நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...

ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன்

இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?

ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....

உண்மை தான் என்றோம்...

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.

ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத

குழந்தை தண்டனை பெறுகிறது

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது

என்று அழகாக சொல்லி முடித்தார்...

"Fault makers are a majority, even they protected in most situations"

இன்றைய நிலை....

"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்..

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 14


முன்னோர்கள்  கூறிய. ""பதினாறு ""  கட்டளைகளைப்  படித்து  முடிந்ததைக்  கடைபிடிக்க. முயலுங்களேன்
  -------          ------------        -------------
1.உணவிடை நீரை பருகாதே!
2.கண்ணில் தூசி கசக்காதே!
3.கத்தி பிடித்து துள்ளாதே!
4.கழிக்கும் இரண்டை அடக்காதே!
5.கண்ட இடத்தில் உமிழாதே!
6.காதை குத்தி குடையாதே!
7.காெதிக்க காெதிக்க குடிக்காதே!
8.நகத்தை நீட்டி வளர்க்காதே!
9.நாக்கை நீட்டிக் குதிக்காதே!
10.பல்லில் குச்சிக் குத்தாதே!
11.பசிக்காவிட்டால் புசிக்காதே!12.பசித்தால் நேரம் கடத்தாதே!
13.வயிறு புடைக்க உண்ணாதே!
14.வாயைத் திறந்து மெல்லாதே!
15.வில்லின் வடிவில் அமராதே!
16.வெற்றுத் தரையில் உறங்காதே!
இவைப் பதினாறையும் கடைபிடித்தாலே பாேதும் உடல் ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எளிய வழிமுறை...!!!

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 13

மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.
*அருமையான செய்தி*
டாட்டா பிர்லாவிற்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.
அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.
பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.
பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்
*1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.*
*2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.*
*3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.*
*4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.*
*5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.*
*6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.*
மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை

Sunday, June 10, 2018

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 12

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.
----------------------------------------
`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!
----------------------------------------
`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!
----------------------------------------
கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப் பார்க்கிறார்கள். #ஐடி பூங்காக்கள்.
----------------------------------------
டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.
----------------------------------------
திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.
----------------------------------------
மிடில் க்ளாஸ் வாழ்க்கை  எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.
----------------------------------------
நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.
----------------------------------------
எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்
----------------------------------------
தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.
----------------------------------------
`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!
----------------------------------------
எது வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ
அது வேண்டாம் என்று உன்னையே சொல்ல வைக்கும் இந்த வாழ்க்கை... 
----------------------------------------
வாழும் காலம் வரை 
அன்பை விதைப்போம்.

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 11


தேவதைகளைக் கொண்டாடுவோம்....
அம்மா... வேண்டாம் இந்த ஆறின இட்லி. சூடா எடுத்துட்டு வா'' அப்பா என் ஐ.டி கார்டு தேடிக் கொடு; என் சைக்கிளை துடைச்சு வை...'
மேலே நாம் கேட்டவை கல்லுாரிக்குச் செல்லும் பெண்ணின் வீட்டில் நடக்கும் உரையாடல்.
காட்சி மாறுகிறது. இப்போது அந்த கல்லுாரிப் பெண்ணுக்குத் திருமணமாகி விடுகிறது. மகளைக் காண வரும் பெற்றோர், மகள் அங்கே பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கிறாள். 'ஏங்க....இன்னொரு இட்லி வைச்சுக்கோங்க...' கணவனிடம் கெஞ்சும் மகள்.. அதற்குள் அத்தையின் குரல். 'இதோ வர்றேன் அத்தை..' பரபரவென ஓடும் மகளைக் கண்டு அதிசயிக்கின்றனர் பெற்றோர்.
பசி சற்றும் பொறுக்காத அந்த செல்லப் பெண், புகுந்த வீட்டில் காலை நேரத்து உணவை உண்ணவே இல்லை. அதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.
ஆத்மாவின் குரல்:
ஆம்... அம்மா வீட்டின் செல்லக் குழந்தைகள் தான், புகுந்த வீட்டின் பம்பரங்கள். இறக்கைகள் மட்டுமே இல்லை இந்த தேவதைகளுக்கு. வேரோடு பிடுங்கிய செடி வேறோர் இடத்தில் நடப்படும் போது அந்த சூழலையும் கிரகித்துக் கொள்கிறது. புதிய சூழலை அங்கீகரித்தும், சுவீகரித்தும் கொள்கிறார்கள். ஆனால் அங்கே அவளுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்படுவதே இல்லை பெரும்பாலும்.
மனைவி என்ற ஆத்மாவின் குரல் யாருக்கும் கேட்பதில்லை. பின் துாங்கி முன் எழும் பத்தினியாகவே பழக்கப்படுத்தி விட்டது சமுதாயம். 'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிதை தவற விட்டால் துாக்கமில்லை மகளே' என்ற கவிஞனின் கானம் காற்றில் மெல்லத் தேய்கிறது. தனக்கென எதையும் யோசிப்பதில்லை மனைவி என்ற பாத்திரம். அம்மா வீட்டில் கதாநாயகி வேடம் தான் எப்போதும்.
கணவன் வீட்டில் குண சித்திர வேடம். மனைவிக்கு என்ன செய்து விட்டோம். இது ஆண்கள் அனைவருக்குமான கேள்விகள். இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள், மனைவியை நேசிப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். உங்கள் மனைவியின் பிறந்த நாள் எப்போது? பிடித்த நிறம் எது?பிடித்த புத்தகத்தின் பெயர் என்ன? இப்படி கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம்.
ஆனால் இதற்கெல்லாம் பெரும் பாலும் விடை தெரியாது என்பது தான் உண்மை. சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்க நான்கு குறிப்புகள் கொடுத்தால் கூட சொல்ல முடியாது என்பதே கூடுதல் சோகம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது கடினமாய் இருந்தால் கேள்விகளைக் கேட்பவர்களாக இருங்கள். சாப்பிட்டியாமா? உடம்பு சரியில்லையா?ஏன் முகம் வாடியிருக்கு? உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாமா? இப்படிக் கேள்விகளைக் கேட்டுத்தான் பாருங்களேன்.
மனைவியின் மன வலிகள் எல்லாம் மறைந்து மட்டுமல்ல; மறந்து கூட போய் விடும். உடல் வலிகள்,மன வலிகளைத் தீர்க்கும் இடமாக புகுந்த வீடும் இருக்கட்டுமே.
நீக்கமற நிறைந்திருப்பவள்:
'என் மனைவி வீட்டுக்குச் செல்வதில்லை நான்...' பெருமித தொனியில் சொன்ன அந்த மனிதரின், உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொண்டு இருக்கிறார் அவர்மனைவி. உங்கள் வீட்டில் ரிமோட் யாரிடம் இருக்கும்?இது 'டிவி' ஒளிபரப்பில் கேட்கப்பட்ட கேள்வி...'அதுவா கணவர் கிட்ட இருக்கும். அவர் இல்லாதப்ப என் மகன் கிட்ட இருக்கும்..' வெள்ளந்தி தனமாய் பதில் வருகிறது அந்தப்பெண்ணிடம். உடல் சார்ந்த பார்வையை விடுத்து மனம் சார்ந்த பார்வையில் பெண்களை நோக்கும் போது மட்டுமே பெண் என்பவளின் பெருமை புரியும்.
ஒரே ஒரு நாள் ஊருக்குச் சென்று விட்ட மனைவி இல்லாத வீடு எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை. வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பவள் மனைவி.அதனால் தான் ஔவைப் பாட்டி
'தாயோடு அறுசுவை போம்தந்தையோடு கல்வி போம்சேயோடு தான் பெற்ற செல்வம் போம்மாய வாழ்வு உற்றாருடன் போம்உடன் பிறப்பால் தோள் வலி போம்பொற் தாலியோடு எவையும் போம்'என்று பாடியிருக்கிறார்.
வாழ்க்கைத் துணை போன பின்னால் சகலமும் போய் விடுவதாக குறிப்பிட்டு இருப்பார். சமீபத்திய சர்வே ஒன்று கூட இதைத் தான் கூறுகிறது.யாதுமாகி நிற்பவள்மனைவி இழப்பிற்குப் பின்னாலான கணவனின் வாழ்நாள் இருப்புகள் குறைந்து விடுகிறதாம். காரணம் என்ன தெரியுமா? எல்லாமுமாகிப் போனவள் ஏதுமற்று போய் விடுவதால் தான்.
'நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை. ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை' என்பது உண்மை தானே?அதிகாலையில் இருந்து அரக்க பரக்க வேலை பார்த்து அல்லாடும் இல்லத்தரசிகள் பற்றி யாரேனும் கேட்டால் அவ வீட்டில் சும்மா தான் இருக்கா என்று வாய் கூசாமல் சொல்லமுடிகிறது பிறரிடம். உலகிலே அதிக சம்பளம் தரக்கூடிய பணி எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அம்மாவின் பணி தான். அதற்கு ஈடு இணையே இல்லை என்பதான பதிலே மானுஷியை உலக அழகியாக ஆக்கியது. மனைவியே தாயாக,மனைவியே தோழியாக,ஆண்களின் கோபங்களின் வடி காலாக என யாதுமாகி நிற்கிறாள்.
அம்மாவிடம் கூட கணவனை விட்டுத் தர முடியாது அவளால் ஒரு போதும்! 'குழம்பு நல்லா இல்லை...இத மனுசன் சாப்பிடுவானா' என்று எரிந்து விழும் கணவனைப் பற்றி கூறிய பக்கத்து வீட்டு பெண்மணியிடம், 'குழம்பு நல்லா இருக்கிறப்ப என்ன சொல்வார் உங்க கணவர்' என்ற என் கேள்விக்கு 'அது அவர் ஒண்ணும் சொல்லாம சாப்பிடறத வைச்சு கண்டு பிடிச்சுக்கலாம்' என்ற பதிலில் மவுனமானது மனது.
'அவர் சொன்னா சரியா இருக்கும்' என்ற நம்பிக்கை வார்த்தைகள், 'அவள் சொன்னா சரியாகத் தான் இருக்கும்' என்று அந்தப் பக்கமும் இடம் பெயர்வது எப்போது? தன் துன்பத்திற்கான தீர்வைத் தரும் மனிதர்களாக கணவரை எதிர் பார்ப்பதில்லை. அப்படியாம்மா..என்று கேட்கும் கணவர்களாக இருந்தால் கூட போதும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.
புதைந்த தனித்திறமை:
பள்ளிப் பருவத்தில் பாட்டுப் போட்டிகளில் பரிசு வாங்கிய பெண்கள், பேச்சு, ஓவியம் என சிறந்து விளங்கிய தோழிகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன் தனித் திறன்களை தனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார்கள். இந்த சமூகம் கூட அப்படித் தான் பெண்ணை வடிவமைக்கிறது. கணவனுக்கு நன்றாக சமைத்துப் போடத் தெரிந்திருத்தலே மிகச்சிறந்த இல்லத்தரசி என்றே பழக்கப் படுத்தி விட்டது. கல்லுாரி படிக்கும் போது பட்டி மன்றம் பேசும் அக்காவை,ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. அறிவாற்றலும், அழகும் நிறைந்த அவளிடம் இப்பவும் 'பேச போவீங்களாக்கா' என்றதற்கு அவள் ரகசிய குரலில் 'அவருக்கு இதெல்லாம் பிடிக்காது..வீட்டில கூட மெதுவா தான் பேசுவேன்' என்றதும்.. மனம் கனத்துப் போனது. இந்த தேவதைகளின் கனவுகளுக்கான முடிவு காலம் பிறந்த வீட்டிலேயே முடிந்து போனதா? விதி விலக்கான ஆண்களும் இருக்கிறார்கள் என்றாலும் விதிகளோடே வாழும் பெண்களும் இருக்கிறார்கள்
தானே? பண்டிகை காலங்களில் புதுத் துணி உடுத்தி, பண்டிகை கொண்டாடும் பெண்களை எப்போது காண்பது? 'சமைக்கவே சரியாப் போயிடும்...எங்க புதுசு கட்ட' என்ற அந்தப் பெண்ணின் குரல் தானே கேட்கிறது. இந்நிலை எல்லாம் மாற வேண்டும்.அன்பு, நம்பிக்கை, காதல் என இழைத்துக் கட்டப்பட்ட குடும்ப பந்தத்தினை மகிழ்வாக்க மனைவியின் வலுவான கரம் தேவை.ஆதலினால் காதல் செய்வீர் உங்கள் மனைவியை. நேசிக்கப்படுதல் மட்டுமல்ல நேசித்தலுமே வாழ்வை மேலும் அழகாக்கும். பல வித கனவுகளுடன் வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தேவதைகளை அன்புக் கரங்களால் வலுவூட்டம் கொடுங்கள். நம்பிக்கை கொடுக்கவும், நம்பி கை கொடுக்கவும் கணவனின் கரங்கள் இருக்கட்டும்.
மனதாலும், நினைவாலும் தாயாய் இருக்கும் தேவதைகளைக் கொண்டாடுவோம். நீரின்றி மட்டுமல்ல பெண்ணின்றியும் அமையாது உலகு.

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 10


ஒரு குட்டிக்கதை.
விலகி நிற்பவர்கள்
         வெல்லுவதில்லை
              வெல்ல நினைப்பவர்கள்     
                      விலகுவதில்லை:
நீல் ஆம்ஸ்ட்ராங்...
இவர் தான் நிலவில்
         முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால்,
     முதன் முதலில் வைத்திருக்க
              வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...
அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...
இவர் தான்
    நிலவுக்கு சென்ற
       அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர்.
அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...
நீல் ஆம்ஸ்ட்ராங்க்
    அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
     மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது
                         இணை விமானி...
இவர்கள் சென்ற
     அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,
     "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால்,
   ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...
"‘நிலவில் முதன்
   முதலில்கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம்.
கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...
தயக்கத்தில் மணிக்கணக்காக
    தாமதிக்கவில்லை...
        சில நொடிகள்தான்
                தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில்
      இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது,
       "கோ-பைலட் நெக்ஸ்ட்..."
நீல் ஆம்ஸ்ட்ராங்
        கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...
உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு,
     ஒரு நொடி தயக்கத்தில்
            மாற்றி எழுதப்பட்டது...
திறமையும்
      தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
      இன்று ஆல்ட்ரினை
            யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான்
     இந்த உலகம் நினைவில்
              வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல...
    தயக்கம்,
        பயம் இவை எந்த அளவுக்கு
           நம் வெற்றியை பாதிக்கும்
             என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை
     பார்க்கும்போதெல்லாம்
       இந்தச் சம்பவத்தை நினைவில்
             வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம்
    நம்முடைய மிகப் பெரிய
       வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே
     மிகப்பெரும் சாதனைகளை
         படைக்கிற வல்லமை
               உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம்,
      பயம்,
          கூச்சம் இவைதான்
                     நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய
        தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை
                 தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை
                     பாராட்டுவதில் தயக்கம்...
ஏன்,
      சிலருக்கு இந்த தகவலை
           நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை
        செய்ய தயங்கினால்,
            தவறானதை தான் செய்து
                             கொண்டிருப்போம்...
எனவே,
           நல்ல விஷயங்களில்...
                   தயக்கத்தை தவிர்ப்போம்..

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 9


மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்....
******
மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- சாந்தனுவாய்....
-------------------------------
சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்
- கங்கை மைந்தானாய்..
--------------------------------
முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
- பாண்டுவாய்....
------------------------------
வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்
- சகுனியாய்...
------------------------------
ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு
- குந்தியாய்...
-------------------------------
குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
- திருதராஷ்டிரனாய்....
------------------------------
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்
- கௌரவர்கள்...
------------------------------
பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே
- துரியோதனனாய்...
------------------------------
கூடா நட்பு, கேடாய் முடியும்
- கர்ணனாய்...
------------------------------
சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்
- பாஞ்சாலியாய்..
------------------------------
தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்
- யுதிஷ்டிரனாய்.....
------------------------------
பலம் மட்டுமே, பலன் தராது
- பீமனாய்....
------------------------------
இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
- அர்ஜூனனாய்....
------------------------------
சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது
- சகாதேவனாய்..
------------------------------
விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது
- அபிமன்யூ
------------------------------
நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
- கண்ணனாய்....
------------------------------
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து..
வாழ்க வளமுடன்

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 8


வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது மனம் தளராமல் இருக்க சில சொற்களை நாம் நினைவில் நிறுத்தி, சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி அவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்.
மனம் சக்தி பெறும். புதிய தெம்போடு செயல்படலாம்.
1. போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.
2. நல்ல வேளை. இதோடு போச்சு.
3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
5. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல.
6. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
7. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.
8. கஷ்டம் தான் … ஆனா முடியும்.
9. நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.
10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
11. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
12. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
13. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
14. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
15. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.
16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.
17. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
18. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா இருக்கணும்.
19. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
20. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
21. அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்.
வீழ்வது கேவலமல்ல நண்பர்களே.....,வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 7

அது இங்கிலாந்தில் இருக்கிற கிராமம்.
அங்கிருந்த விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது.
'பட்டீ' (Buddy) என்று அதற்குப் பெயர் வைத்திருந்தார் அவர்.
அவருடைய நிலத்து வேலைகளுக்கு உதவுவது பட்டீதான்.
ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார் அந்த விவசாயி.
அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார்.
வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய
கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின.
வந்தவர், வணக்கம் சொன்னார்.
விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார்.
அவர் உட்கார்ந்ததும், 'சூடாக டீ குடிக்கிறீங்களா?' என்று கேட்டார்.
வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார்.
'சொல்லுங்க, என்ன விஷயம்?' விவசாயி கேட்டார்.
'ஒண்ணுமில்லை. நான் லண்டன்லருந்து வர்றேன்.
இது எனக்குப் பழக்கமில்லாத பாதை.
வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு.
அதை வெளியே எடுக்கணும்.
உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க.
அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்று சொன்னாங்க.
அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று...
'ரொம்பப் பெரிய காரா?' என்று கேட்டார் விவசாயி.
'இல்லை, இல்லை. சின்ன கார்தான்' என்றார் வந்தவர்.
விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார்.
குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார்.
விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை
எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார்.
கார் சிறியதாகத்தான் இருந்தது.
ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய
குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது.
விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி,
குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார்.
கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.
பிறகு, 'எங்கடா கேஸி (Casey) இழு பார்ப்போம்!' என்று சத்தமாகக் குரல் கொடுத்தார்.
குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.
'பெய்லி (Bailey) இழுடா ராஜா!' இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி.
குதிரை நகரவேயில்லை.
'டேய் மேண்டி (Mandy) வேகமா இழு!' மறுபடியும் உரத்த குரலில் சொன்னார்.
குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவேயில்லை.
'என் செல்லம் பட்டீ நீயும் சேர்ந்து இழுடா!' என்றார்.
அவ்வளவுதான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது.
அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.
வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார்.
ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க?
அதுதான் எனக்குப் புரியலை.’
'என் பட்டீக்கு கண்ணு தெரியாது.
தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு
அது நினைச்சுடக் கூடாது இல்லியா?
அதான் அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்ப வெச்சேன்.
அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு.
காரை வெளியே இழுத்துடுச்சு!'
அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை.
ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்’.
வார்த்தைகளின் மகிமை அபாரமானது.
அதனால்தான் நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும்போது,
கடுஞ்சொற்களை ஏன் பேச வேண்டும் என்பதை
'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்கிறார் வள்ளுவர்.

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 6

ஒரு கிராமத்தில் கொல்லன்  ஒருவன் வாழ்ந்து வந்தான்,
"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!
அவனுக்கு..,
" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!
அவன் வாழ்க்கை...
     உழைப்பும்,
         காதலும்,
              ஊடலுமாக
                 மகிழ்ச்சி
                     வெள்ளமாய்
    ஒடிக் கொண்டிருந்தது.......!!
கொல்லப் பட்டறை தொழில்...,
" ஒரு சமயம் நலிவுற்றது"......!!
   "அன்றாட உணவுக்கே வறுமை ".....,
என்ற நிலை வந்துவிட்டது.....!!
"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!
அதைக் கண்ட மனைவி  ஆறுதலாய் பேசினாள்,
"எதுக்கு கலங்குறீங்க"......!!
"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,
"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,
"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,
" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!
"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!
"புது நம்பிக்கை
     புது உற்சாகம்
          உள்ளத்தில்" கொல்லன்.......,
"இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!
"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!
வீட்டில் தினமும்..,
      சோளக்கஞ்சி,
          கொள்ளுத் துவையல்....
கூடவே .....,
   மனைவியின் சிரித்த முகமும்...... ,
கனிவான கொஞ்சலும் .....,
"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்".....,
சற்றே சோகமும் இழையோடி இருந்தது,
ஒருநாள்...,
" ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்"........,
"மாமோய்,,,
  "இன்னும்  உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!
விறகு வெட்டியான.....
  நம்ம கொல்லன் சொன்னான்...
"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,
"நம்ம வீட்டில்...
      தினந்தினம்
           நெல்லுச்சோறும்..,
                 கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!
இப்போ....,
" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!
அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!
"கண்ணு கலங்காதீங்க"......!!
"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,
அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!
காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,
" கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!
கடைன்னு ஆயிட்டா.....,
" எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!
"நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.
"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!
விறகு வெட்டியானவன்....,
"இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!
"வருமானம் பெருகியது"......!!
அப்புறமென்ன....
" வீட்டில் கறிசோறு தான்".....!!
ஆனால்...,
    வாழ்க்கை
       அடுத்தடுத்த
             சோதனைகளை
                   ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!
"வந்தது கெட்ட நேரம்"........,
"விறகு கடையில் தீ விபத்து".........!!
"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!
"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....
விறகு கடை முதலாளி.
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,
"கலங்காதே நண்பா"..... ,
"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!
எதிர்காலத்தில்.......,
" எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!
மனைவி வந்தாள்.....!!
"கண்ணீரை துடைத்தாள்"....!!
"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!
"கண்ணீர் மல்க சொன்னாள்".....,
"இப்போ என்ன ஆயிடுச்சுனு  அழறீங்க".....!!
"விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!
"கரியாத்தானே ஆகியிருக்கு"......!!
நாளைலயிருந்து....,
" கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!
தன் தலை நிமிர்த்தி.....,
" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,
"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!
'ஊக்குவிக்கவும்'....... ,
      'உற்சாகப் படுத்தவும்'........,
          "அன்பு செலுத்தவும்"...,
  "அன்பான மனைவி அமைந்தால்".......... ,
"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,
"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!

Sunday, June 3, 2018

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 5




நமது முன்னோர்கள் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும்,  அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும்  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
சித்திரை (equinox) - புத்தாண்டு.
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
நமது முன்னோர்கள்  "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 4



நான்கு நபர்களை புறக்கணி*
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே*
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்*
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 3



*வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*
👇 👇 👇
*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*

*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*

*தேவைக்கு செலவிடு........*

*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*

*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*

*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*

*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*

*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*

*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*

*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*

*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*

*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*

*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*

*உன் குழந்தைகளை பேணு......*

*அவர்களிடம் அன்பாய் இரு.......*

*அவ்வப்போது பரிசுகள் அளி......*

*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*

*அடிமையாகவும் ஆகாதே.........*

*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*

*அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து* பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*

*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*

*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*

*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்......*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*

*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
*நீ எப்போது இறப்பாய்* *
என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*

*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*

*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*

*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*

*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*

*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*

*நண்பர்களிடம் அளவளாவு.*

*நல்ல உணவு உண்டு.....*
*நடை பயிற்சி செய்து.....*
*உடல் நலம் பேணி......*
*இறை பக்தி கொண்டு......*
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்-

இன்னும்......*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*
*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 2






அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
.........................................
கரியையும் சாம்பல்தூளையும்
கொடுத்து பல் விளக்கச் சொன்ன போது
பட்டிக்காடு என இளித்த பற்கள்
இன்று வேரற்று போனபோது
ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
வெந்தயமும் சீகைக்காயும்
வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி
என்றபோது பித்துக்குளிகள் என
எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை
சிக்கென பிடித்து இன்று வெண்கேசம்
வந்தபின்பு ஓடுகின்றேன்
சீகைக்காய் வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
பாசிப்பயறோ கடலைமாவோ
அரைத்துக்குளி என்ற போது
லிரில் லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்
அழகு சோப் என அத்தரித்திரங்கள்
கைகாட்டிய கட்டிகளை எல்லாம்
போட்டு தோள் சுறுங்கி
வயோதிகம் தெரிந்த பின்பு
ஓடுகின்றேன் பயத்தமாவு அரைக்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
இருமலோ தும்மலோ வந்த போது
துளசி தூதுவளை சுக்கு மிளகு
போட்டு கசாயம் தந்த போது
முகத்தை சுளித்து காஃப் சிரப்
குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு
ஓடுகின்றேன் துளசி தூதுவளைச்
செடி வளர்க்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
வயிறு வலி என்ற போது
வெறும் வயிற்றில் வெந்தயக்களியோ
கற்றாழைச்சாறோ கொண்டு வந்து
தந்த போது தூக்கி எறிந்து சீறி
ப்ருபன்னும் பெயின்கில்லரும் போட்டு
கருப்பை பலுதடைந்த பின்பு
ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி
மனமாய் தந்தபோது
சன்புளவர் ஆயில் பார்
முகம் காட்டும் தூய்மை
எனக்கூறி முகத்தில் அரைய
பதிலுறைத்துவிட்டு இன்று
வாய்க்கு விளங்காத வாசமே இல்லாத
வாழ்வு வந்த பின்பு
செக்கு நோக்கி ஓடுகின்றேன்
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்......
மண்பானை சமையல்
மண்பானை குளிர் நீரை எல்லாம்
மாற்றி விட்டு ஆர்வோ வாட்டர்
என புழு பூச்சி கூட வாழத்தகுதி
அற்ற நீரைக்குடித்து குடித்து
சவமானபின்பு ஓடுகின்றேன்
மண்பானை வாங்க
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.......
படித்த தலைமுறை எனும்
நாகரீகத்தில் திளைத்து
குருகுலக் கல்வியை
கோடிக்கணக்கான ரூபாய்
கல்வியாக்கி கொல்லைத்துளசி
வைத்தியம் மறந்து மாடி மாடியாய்
குளீருட்டப்பற்ற அறையில் லட்ச
லட்சமாய்க் கொட்டி பிணமாகவும்
வாழ்வில் ஏது சுதந்திரம்
ஏது சுகாதாரம் என்று
எங்கோ இருந்து
அப்பத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.........
......................சிந்தனைத்தமிழ்..
மூத்தோர்சொல் வார்த்தையும்
முதுநெல்லிக்காயும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்..

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 1

 தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!

இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக  காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து  அதை விட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போது தான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.

அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக  வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.

என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!
எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!
அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!
அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது, எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!!
இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!

நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!
ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டு கொள்ள வேண்டும்????
யார் இவர்கள்????

என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்????

நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!
அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!
அதுவும் வெகு தொலைவில் இல்லை!
சர்வமும் ஒருநாள் அழியும்!

மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!
தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.
வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!

தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.
நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதே போல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப் போவதில்லை. இது தான் வாழ்க்கை.

"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள் 😃😃

படித்ததில் பிடித்தது


இதை கண்ணதாசன் தன் வைர வரிகளில் அழகாக உரைத்திருப்பார்
                                  
எங்கே வாழ்க்கை
தொடங்கும் அது எங்கே
எவ்விதம் முடியும் இதுதான்
பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது 

 பாதை எல்லாம்
மாறி வரும் பயணம்
முடிந்துவிடும் மாறுவதை
புரிந்துகொண்டால் மயக்கம்
தெளிந்துவிடும்
 நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால் தெய்வம்
ஏதுமில்லை நடந்ததையே
நினைத்திருந்தால் அமைதி
என்றுமில்லை