Sunday, August 16, 2020

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 41

 * யார் காரணி* !!!

 ஒரு துறவி இருந்தார்,   அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவர் வைத்திருந்தார் .

 எங்கே சென்றாலும் அதை எடுத்து செல்ல மறக்க மாட்டார்.அவ்வப்போது அதை எடுத்து தன் முகத்தை பார்த்துக் கொள்வார்.

 அவருடைய சீடர்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது.

 இவர் எல்லா ஆசைகளும் துறந்தவர் ஆயிற்றே,  பிறகு எதற்காக இப்படி அடிக்கடி தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறார் என்று குழப்பம் எழுந்தது.

 துறவிக்கு தெரியாமல் தங்களுக்குள் அது பற்றி அடிக்கடி பேசிக் கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் தங்கள் குருவான அவரை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள்.

 மேலும் நம் குருநாதருக்கு,  தான் ரொம்ப அழகு என்று நினைப்பு!  அதனால்தான் அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து ரசித்துக்

கொண்டிருக்கிறார் என்று பேசிக் கொண்டனர்.

 சில நேரங்களில் அவர்கள் அப்படி பேசியது துறவியின் காதுகளில் விழுந்தது, ஆனாலும் அவர் தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை .

 இவ்வாறு இருக்க,

 ஒருநாள் அந்நாட்டு மன்னன் அந்தத் துறவியைப் பார்க்க வந்திருந்தான்.

அவன் பணிவுடன் ஆசிரமத்திற்குள் நுழைந்து துறவியை வணங்கிய போது அவர் வழக்கம் போல கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 இப்பொழுது மன்னனுக்கு அதிர்ச்சி!

" சுவாமி நீங்கள் எல்லாவற்றையும் துறந்தவர் ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லையா என்ன?  என்று அவரிடம் கேட்டான் மன்னன் .

 துறவி சிரித்தார்.

" இதே சந்தேகம் என் சீடர்கள் பலருக்கு இருக்கிறது,  அவர்கள் கேட்கவில்லை நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்றவர், தான் கண்ணாடியை பார்ப்பதற்கான  காரணத்தை மன்னனிடம் சொன்னார் .

 மேலும் எனக்கு ஏதாவது பெருமை கிடைத்தால் அதற்கு காரணம் யார் என்று தெரிந்து கொள்ள இந்த கண்ணாடியை பார்ப்பேன் .அதில் என் உருவம் தெரியும்.

எனக்கு பெருமை கிடைக்க நானே முதல் காரணம் என்பதை உணர்ந்து கொள்வேன்.

'இந்த பெருமையை மண்டைக்கு ஏற்றி தலைகனம் கொண்டால் வீழ்ச்சி அடைய போவது யார் என்று கேட்டுக் கொண்டு கண்ணாடியை பார்ப்பேன் .அதில்  நான் தெரிவேன் .இந்த உண்மையை புரிந்து கொண்டு என்னுடைய இயல்பு நிலையை பெறுவேன் .

 கூடவே எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால்,  பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ள கண்ணாடியை பார்ப்பேன் .

 அங்கே அந்தக் கண்ணாடியில் என் உருவம் தோன்றும் எனவே  என் பிரச்சனைக்கு நானே முதல் காரணம் என்று புரிந்து கொள்வேன்.

 சரி,  பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டாமா அதற்கு பொருத்தமான நபர் யாரென்று தேடுவதற்காக மறுபடியும் கண்ணாடியை பார்ப்பேன், அங்கே நான் மீண்டும் தெரிவேன் .

 எனவே, என் பிரச்சினையை யாரோ   வந்து தீர்ப்பார்கள் என்று காத்திருக்காமல்,  நானே தான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வேன் .

 எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால் எனக்கு நேரும் நன்மைக்கும் தீமைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது .

என் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் காரணமாக இருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் துறவி .

 அன்பிற்கினிய உறவுகளே நம் வளர்ச்சிக்கும் நம் வீழ்ச்சிக்கும் நாம்தான் முதல் காரணமாக இருக்க முடியும் .

 வாழ்க்கை நாம் நினைப்பது போல மிக கடினமானது அல்ல

 மிகவும் எளிமையானது.

 அதை கடினமாக்குவதும், அல்லது அதை எளிமையாக கையாளுவதும் நம் கையில் உள்ளது.*

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 40

 ஒரு   மரத்திலே    புஷ்பத்திலிருந்து தான்   காயும், பழமும்    உண்டாகின்றன..

புஷ்பமாக   இருக்கும் போது மூக்குக்கும்,    பழமாக   இருக்கும்   போது   நாக்குக்கும்    ரஸமாக    இருக்கின்றன.

பழம்   நல்ல   மதுரமாக   இருக்கிறது..  இந்த   மதுரம்   வருவதற்கு   முன்   எப்படி   இருந்தது?   பூவில்   கசப்பாகவும்,   பிஞ்சில்   துவர்ப்பாகவும்,   காயில்   புளிப்பாகவும்,   கனியில்   மதுரமாகவும்   இருக்கிறது..

மதுரம்    என்பது   தான்  சாந்தம்..   சாந்தம்   வந்தால்   எல்லாப்    பற்றும்  போய் விடுகிறது..    பழத்தில்   மதுரம்   பூராவாக   நிரம்பிய  உடனே கீழே   விழுந்து  விடுகிறது..   அது போல்,   இருதயத்தில்   எல்லா   இடத்திலும்   மதுரம்    வந்து   விட்டால்    தானாகவே   எல்லாப் பற்றும்    போய் விடும்..

புளிப்பு   இருக்கும்  வரை   பற்றும்   இருக்கும்..   அப்போது   காயைப்  பறித்தால்   காம்பில்   ஜலம் வரும்.   காயிலும்   ஜலம்   வரும்.    அதாவது,   மரமும்  காயை   விட்டு விட   விரும்பவில்லை.   காயும்   மரத்தை  விட்டு விட   விரும்பவில்லை..

ஆனால்,  நிறைந்த   மதுரமாக  ஆகி விட்டால்,   தானாகவே  பற்றும் போய் விடும்.   பழமும்   இற்று விழுந்து விடும்..   அதாவது,   மரமும்  பழத்தை வருந்தாமல்   விட்டு விடுகிறது..   பழமும்   மரத்தைப்   பிரிய   வருந்துவதில்லை..

படிப்படியாக   வளர்ந்து   மதுர மயமாக   ஆகி விட்ட   ஒவ்வொருவனும்    இப்படியே   ஆனந்தமாக    சம்சார   விருட்சத்திலிருந்து    விடுபட்டு விடுவான்..

பழமாக    ஆவதற்கு   முன்   ஆரம்ப தசையில்   புளிப்பும், துவர்ப்பும்   எப்படி    வேண்டியிருக்கின்றனவோ,  அதைப்   போல  காமம், வேகம், துடிப்பு   எல்லாம்   வேண்டியிருக்கின்றன..

இவற்றிலிருந்து   நாம்   ஆரம்ப  தசையில்   பூரணமாக    விடுபட முடியாது..   ஆனாலும்   இவை   எல்லாம்    ஏன்   வருகின்றன?   என்று   அடிக்கடி   நினைத்தாவது பார்க்க வேண்டும்...

இப்போது   இன்ன  உணர்ச்சி   வந்ததே!   ஆசை   வந்ததே!   கோபம்  வந்ததே!   பெருமை   வந்ததே!   பொய்   வந்ததே! இதனால்   ஏதாவது பிரயோஜனம்   உண்டா?   இந்த   உணர்ச்சி   அவசியமாக   வருகிறதா?   அனாவசியமாக  வருகிறதா?   என்று   நினைத்துப் பார்க்க வேண்டும்..    அப்படி   நினைக்கவில்லை   என்றால்   அவை   நம்மை  ஏமாற்றி விடும்,  ஏமாந்து விடுவோம்..

புளிப்பு   இருக்க  வேண்டிய   சமயத்தில்   புளிப்பு   வேண்டும்,  துவர்ப்பு   இருக்க வேண்டிய   சமயத்தில்   துவர்க்க  வேண்டும்..

ஆனாலும்,   அந்தந்த   நிலையோடு  நிற்காமல்,   பிஞ்சு   படிப்படியாகப்   பழமாகிக்   கொண்டே   வருவதைப்  போல,   நாமும்   மேலும்  மேலும்   மாதுரியமான   அன்பையும்,  சாந்தத்தையும்    நினைத்துக் கொண்டே   வந்தால்   நாமாகப்   போய்   மோட்சத்தைத்   தேட வேண்டாம்..

எந்தப்   பருவத்தில்   எப்படி   இருக்க வேண்டுமோ   அப்படி   இருந்தால்,   தானாகவே   மோட்சம்    என்ற   மதுர நிலை   வந்து விடும்...

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 39

 #வாழ்க்கையில் 
எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்..


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.

25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்

பின்பற்றுங்கள்...வெற்றிபெறங்கள்...


Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 38

 தமிழாசிரியர் (முதல் நாள் வகுப்பில்) : தம்பிகளா! நீங்க எந்த வகுப்புல எப்படி வேணாலும் பேசுங்க. ஆனா, என் வகுப்புல மட்டும் கண்டிப்பா தூய தமிழ்லதான் பேசணும், பதில் சொல்லணும். புரியுதா?


மாணவர்கள் : சரி ஐயா!

ஆசிரியர் : பச்சை சட்டை போட்ட தம்பி! உன் பெயர் என்ன?

மாணவன் : பசுவுக்கு உடம்பு சரியில்லை ஐயா!

ஆசிரியர் : என்னப்பா சொல்றே ? புரியலையே ?

மாணவன் : என் பெயர் கௌ சிக் ஐயா!

ஆசிரியர் : உங்க அப்பா பேரு என்னப்பா?

மாணவன் : எங்கப்பா பேரு சுடுசோறு ஐயா!

ஆசிரியர் : மறுபடியும் குழப்பாதே தம்பி ! சரியா எனக்குப் புரியறமாதிரி சொல்லு.

மாணவன் : புரியலையா ஐயா ? என் தந்தையின் பெயர் ஆராவமுதன்.

ஆசிரியர் : நீங்க தமிழ்ல சொன்னதெல்லாம் போதும். எனக்கு தலை சுற்றுகிறது. ஆங்கிலத்திலேயே சொல்லுங்கள். உன் பேரு என்னம்மா ?

மாணவி : என் பெயர் லேடி ஸ்பின் பவுலர் ஐயா !

ஆசிரியர் : ஐயோ முடியலம்மா ! அப்படீன்னா என்னம்மா ?

மாணவி : என் பெயர் பால திரிபுர சுந்தரி ஐயா!

ஆசிரியர் : ஆ ஆ ஆ ஆ . . . .. . .

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 37

 ஊசியின் ஓட்டையில் யானை போய்விட்டது, ஆனால் அதன் வால் போக முடியவில்லை..! மகாபாரதம் போடும் விடுகதைக்கு விடை தெரியுமா?

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

குதிரையின்_உரிமையாளரோ, "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார். சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்! ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.

சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார். நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார். அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள். "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்..

"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன." அதை நினைத்துத்தான் நடுங்கினேன். "ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று விரிவாகக் கூறினார்.

"உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி_புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்து மூன்றாவது கேள்வியில், பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 36

 எது கெடும் ?!?


01) பாராத பயிரும் கெடும்.

02) பாசத்தினால் பிள்ளை கெடும்.

03) கேளாத  கடனும் கெடும்.

04) கேட்கும்போது உறவு கெடும்.

05) தேடாத செல்வம் கெடும்.

06) தெகிட்டினால் விருந்து கெடும்.

07) ஓதாத கல்வி கெடும்.

08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.

09) சேராத உறவும் கெடும்.

10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.

12) நயமில்லா சொல்லும் கெடும்.

13) கண்டிக்காத பிள்ளை கெடும்.

14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.

15) பிரிவால் இன்பம் கெடும்.

16) பணத்தால் அமைதி கெடும்.

17) சினமிகுந்தால் அறமும் கெடும்.

18) சிந்திக்காத செயலும் கெடும்.

19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.

20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.

22) முறையற்ற உறவும் கெடும்.

23) அச்சத்தால் வீரம் கெடும்.

24) அறியாமையால் முடிவு கெடும்.

25) உழுவாத நிலமும் கெடும்.

26)உழைக்காத உடலும்  கெடும்.

27) இறைக்காத கிணறும் கெடும்.

28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.

29) இல்லாலில்லா வம்சம் கெடும்.

30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.

32) துணையில்லா வாழ்வு கெடும்.

33) ஓய்வில்லா முதுமை கெடும்.

34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.

35) அளவில்லா ஆசை கெடும்.

36) அச்சப்படும் கோழை கெடும்.

37) இலக்கில்லா பயணம் கெடும்.

38) இச்சையினால் உள்ளம் கெடும்.

39) உண்மையில்லா காதல் கெடும்.

40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.

42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

43) தூண்டாத திரியும் கெடும்.

44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

45) காய்க்காத மரமும் கெடும்.

46) காடழிந்தால் மழையும் கெடும்.

47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.

48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.

49) வசிக்காத வீடும் கெடும்.

50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.

52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.

53) பொய்யான அழகும் கெடும்.

54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

55) துடிப்பில்லா இளமை கெடும்.

56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.

57) தூங்காத இரவு கெடும்.

58) தூங்கினால் பகலும் கெடும்.

59) கவனமில்லா செயலும் கெடும்.

60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு


Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 35

 பணத்தை எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதைவிட எப்படி செலவளிக்கிறோம் என்பதில் கவனம் கொள்ளுங்கள்"

ஒரு கல்லூரி மாணவி ஒருவர் தன் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க அப்பாவிடம் பணம் கேட்டார். அப்பா, ‘‘எவ்வளவு வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘ஐந்து பேர் போகிறோம். 4 ஆயிரம் ரூபாய் கொடுங்கள்’’ என்றார் மகள்.

‘வெளியே சென்று செலவழிப்பதற்கு இவ்வளவு பணம் தேவையா?’ என்று வியந்த அப்பா, ‘‘என்னிடம் இப்போது இல்லை. ஒரு வாரம் பொறுத்துக்கொள். தருகிறேன்’’ என்று சொன்னார். மகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘‘எனக்கு இப்போதே பணம் வேண்டும்’’ என்று கேட்டார்.

‘‘அவ்வளவு தொகையை ஒருநாள் மதிய விருந்துக்கு செலவழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன் படிப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்று உனக்கே தெரியும். நம் குடும்ப நிலைமையை மீறித்தான் உன் படிப்பு செலவை கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவசியமானதற்கு செலவழிக்கலாம். ஆனால், ட்ரீட் என்ற பெயரில் அனாவசிய செலவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் நீ இந்தக் காலத்துப் பெண். உன் விருப்பத்தையும் மறுக்க என்னால் முடியாது. ஆகையால் குறைந்தது மூன்று நாட்களாவது பொறுத்துக் கொள்’’ என்று அப்பா சொன்னார்.

மகள் அதை ஏற்காமல் பதிலுக்குப் பேச, அப்பா அதற்கு விளக்கம் கொடுக்க, அது காரசாரமான விவாதமாகி விட்டது. கடைசியில் மகள், ‘‘நான் யாருக்கும் ட்ரீட் கொடுக்கலை. ஆனா நான் மட்டும் யாராவது ட்ரீட் கொடுத்தா வெட்கமே இல்லாம நல்லா தின்னுக்கிறேன். இப்ப உங்களுக்குத் திருப்தியா?’’ என்று கண்ணீரோடு சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே போனார். அப்பாவின் குரல் பின்னால் கேட்க, அதை அலட்சியம் செய்துவிட்டு வெளியே போனார்.

நகரத்தில் இலக்கே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார். அவசரத்தில் மொபைல் போனையும் எடுத்து வரவில்லை. அது மாலைப் பொழுது ஆனதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. இங்கும் அங்கும் சுற்றியதில் பசித்தது. பைக்கை ஒரு டீக்கடை அருகே நிறுத்தினார். பெரிய சாலையின் ஓரம் பெரிய நடைபாதை. நடைபாதையை ஒட்டி டீக்கடை இருந்ததால் பலர் அந்நடைபாதையில் நின்று கொண்டு பொறுமையாக டீ குடிக்க வசதியாய் இருந்தது. இவர் ஒரு டீயும் வடையும் வாங்கிக் கொண்டார்.

அப்போது அங்கே மூன்று ஆட்டோக்கள் வந்து நின்றன. ஒவ்வொரு ஆட்டோவிலும் ஆண்களும் பெண்களுமாய் பலர் நெருக்கியடித்து அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தினர் என்று அவர்கள் பேசுவதை வைத்துத் தெரிந்து கொண்டாள்.

அதில் ஓர் இளைஞன் உற்சாகமாய் டீக்கடையில் வந்து தட்டு தட்டாக சமோசாக்களும், உளுந்து வடைகளும் வாங்கி வாங்கி ஆட்டோவில் இருப்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். சட்னியை அவர்கள் இருக்கும் இடத்துக்கே எடுத்து வந்து ஊற்றினான். சமோசாக்களுக்கு தொட்டுக்கொள்ள சாஸ் தேவைப்பட்டபோது எடுத்து வந்து ஊற்றிக் கொண்டிருந்தான். அவர்கள் அரட்டையடித்தபடி சாப்பிட்டார்கள்.

எல்லோரும் சாப்பிட்டபிறகு அந்த இளைஞன் பணம் கொடுத்தான். 500 ரூபாய்க்கும் குறைவாகவே ஆகியிருந்தது. கிட்டத்தட்ட 15 பேருக்கு 500 ரூபாய்க்குள் அவன் ட்ரீட் வைத்ததை பார்த்து ஆச்சர்யப்பட்டாள். ஆனால் அவர்கள் அனைவரும் உற்சாகமாய் இருந்தார்கள்.

 ‘பணம் செலவழிப்பதற்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே உற்சாகமாய் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை’ என்பதை அவர் புரிந்து கொண்டார். ‘எவ்வளவு செலவழிக்கிறோம் என்பது முக்கியமில்லை. அதை எப்படி ஆழ்மனதில் இருந்து ரசித்து செலவழிக்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்பதையும் உணர்ந்தார். ‘நண்பர்களுக்கு பெரிய உணவகத்தில்தான் ட்ரீட் வைக்க வேண்டும் என்று போலித்தனமான கௌரவம் பார்த்து அப்பாவை வேறு மனக்கஷ்டப்படுத்தி விட்டோமே’ என்று வருந்தினார்.

அவசரமாக வீட்டுக்குத் திரும்பியவர், பைக்கை நிறுத்திவிட்டு அப்பாவிடம் ஓடிச் சென்றார். மகளைப் பார்த்து பதறிய அப்பா, ‘‘எங்கம்மா போனே? கவலைப்படாதே! நீ கேட்ட பணம் ரெடி பண்ணிட்டேன். ஆனா இனிமே எப்பவுமே இப்படி கோபத்துல பைக்கை எடுத்துக்கிட்டு கிளம்பாதே. அப்பாவுக்கு ரொம்ப பயமா இருக்கு’’ என்றார். அவர் அப்படிச் சொல்லும்போது ஒரு குழந்தையாகத் தெரிந்தார்.

‘‘இல்லப்பா! ட்ரீட்டுக்கு இவ்வளவு பணம் வேணாம். நான் என் ஃப்ரெண்ட்ஸை வீட்டுக்குக் கூப்பிடப் போறேன். நானே சமைச்சி நம்ம வீட்டு மொட்டை மாடில நண்பர்களுக்கு விருந்து வைக்கப்போறேன்’’ என்ற மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அப்பா.

‘உலகம் இவளுக்கு ஏதோ நல்லதாய் கற்றுக் கொடுத்திருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டார். ‘‘சாப்பிடுங்கப்பா, ருசியா இருக்கு’’ என்று அப்பாவுக்காக வாங்கி வந்திருந்த சமோசாவை நீட்டினார் அந்த அன்பு மகள்.எது தேவை,அந்தத் தேவையை சிக்கனமாக எப்படி கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.பெற்றோரின் நிலையைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.பெற்றோர் உங்கள் மனம் கோணக்கூடாது என்பதற்காக பணம் ரெடி  செய்து கொடுத்துவிடுவார்கள்.ஆனால் நீங்கள் தான் எது அவசியம்,எது அனாவசியம்,ஆடம்பரம் என்பதைப் புரிந்து செலவிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.இதுவும் எதிர்கால உங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய "பணத்தை திறம்பட நிர்வகிக்கும் கலையே" என்பதை மனதில் கொள்ளுங்கள்.பெற்றோரும் இதை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்து புரிய வைக்க வேண்டும். இருவருமே சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

Saturday, August 15, 2020

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 34

 மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது சரியான உண்மை!!!


"அர்த்தமுள்ள இந்து மதம்"

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :? ?👇👍

1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.

4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி

வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை

கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.

7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.

8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.

👉மரமும் கடவுள்,

👉கல்லும் கடவுள்,

👉நீரும் கடவுள்(கங்கை),

👉காற்றும் கடவுள் (வாயு),

👉குரங்கும் கடவுள் அனுமன்,

👉நாயும் கடவுள் (பைரவர்),

👉பன்றியும் கடவுள் (வராகம்).

9. நீயும் கடவுள்,

நானும் கடவுள்...

பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.

10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள்,

பெண் ஆசையை ஒழிக்க

👉இராமாயணம்,

மண் ஆசையை ஒழிக்க

👉மகாபாரதம்,

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த

👉பகவதம்,

அரசியலுக்கு

👉அர்த்தசாஸ்த்திரம்,

தாம்பத்தியத்திற்கு

👉காம சாஸ்திரம்,

மருத்துவத்திற்கு

👉சித்தா, ஆயுர்வேதம்,

கல்விக்கு

👉வேதக் கணிதம்,

உடல் நன்மைக்கு

👉யோகா சாஸ்த்திரம்,

கட்டுமானத்திற்கு

👉வாஸ்து சாஸ்திரம்,

விண்ணியலுக்கு

👉கோள்கணிதம்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து

"கொல்லாமை " "புலால் மறுத்தல்",

ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.

13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.

13. முக்தி எனப்படும் மரமில்லா பெரு வாழ்விற்கு வழிகாட்டும் மதம்.

14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.

15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமை

கொள்வோம்

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 33

 கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?...
அறிவோமா?!.


சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது....

 அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப் படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.


உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..


மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!


மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!


மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!


மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.

நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங் கழுத்தை இனிய வேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது.

மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோ வைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா!.

இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல் படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோ வைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவ கோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவ கோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?.

கிரகங்களின் மாற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை.

ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூட நம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை.

ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள்.

ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!

காக்க காக்க கனகவேல் காக்க!

நோக்க நோக்க நொடியில் நோக்க!

இந்து தர்மம் என்பது மனோவியலும்,அறிவியலும் ஆகும்

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 32

 #குலதெய்வம்மகிமை...

விஞ்ஞான ரீதியிலும் அற்புத விளக்கம்!

நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.அதன் சக்தியை அளவிடமுடியாது எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்அழைக்கப்படுகின்றன.குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரியஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்.இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று.அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.இது எத்தனை தூரப்பார்வையோடு,வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோ சோமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது.வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்,பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்.பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை.ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்.அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்.புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

.

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 31

 அதெப்படி?


“ அப்பா! நான் ஆபிஸ்லேருந்து வர லேட்டாகும். இன்னிக்கு எங்க ஆபிஸ்ல New Year Party. So, நாங்கள்ளாம் Hotel போறோம். அங்கேயே சாப்டு வந்துடுவேன்” கிளம்பிக்கொண்டே கோபி அப்பாவிடம் சொன்னான்.

“ அதென்ன Second Bag?” கோபியின் கையிலிருந்த Office bag போல இன்னொரு bagஐப் பார்த்து அப்பா கேட்டார்.

“ இன்னிக்கு Partyயில்லயா! அதனால சாயங்காலம் Dinner dress. அது பெரிய Hotel. அங்க dress code very important. So general office dressல போகமுடியாது. வறேம்பா” அவசரமாகக் கிளம்பிச்சென்றான்.

ஓரு வாரம் கழித்து கூடாரை வெல்லும் பாசுரம். குடும்பத்துடன் கோவிலுக்குக் கிளம்பினர். “ அப்பா நா Ready” என்றான் கோபி.

அழகான நீலநிற Jeans, அதற்கு Matchingஆக காலர் இல்லாத Sleveless பனியன். இருபத்தைந்து வயது இளைஞனுக்குரிய வசீகரம்.

“ஏம்பா, வேஷ்டி உடுத்தலயா?” – அப்பா.

“Oh Dad, பக்தி மனசுல இருந்தா போறாதா! இஃதென்ன வேஷம். I don’t like this.” என்றான் தோளக்குலுக்கி…

“கோபி! Last week dinnerக்கு dress code follow பண்ணயே. அதெப்படி? அப்ப இந்த தோள குலுக்கலயா? ஞாபகமாக another Set dress எடுத்து வச்சுண்டயே! My dear Son பெருமாள சேவிக்க dress code necessaryன்னு accept பண்ண முடியலயா? ஒரு நாள் சாப்பாட்டுக்கே dress codeன்னா, நமக்கு என்னிக்கும் படியளக்கும் பெருமாளுக்கு அது Necessity இல்லயா?”

அப்பா பேசி முடிக்குமுன் கோபி Pantஐ மாற்றி வேஷ்டியுடன் சட்டையில்லாமல் மேல் வஸ்திரத்துடன் வந்து நின்றான். இனி அவன் இந்த argument பண்ணமாட்டன். சரி what about us?


Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 30

 ! குருவே சரணம் !! 


சத்ரபதி சிவாஜி, வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற ‘சிவாஜி’ மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது.

நதியில் இறங்கி சிவாஜி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது...

ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார்.

ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது, அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன.

மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார்.

அங்கே ஓரிடத்தில்...

சிவாஜி கண்ட காட்சி, அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம்? அங்கே மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.

அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன.

அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் எல்லாம் ஒரே கூட்டமாக அமர்ந்து கொண்டும் ஒன்றிரண்டு சுற்றியபடியும் இருந்தன.

மறுநாளும்...

சிவாஜி அந்த ஞானியைத் தரிசிக்கப் போன போது ஞானி வழக்கப்படி இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.

அவரைச் சுற்றிக் கூடியிருந்த காட்டு விலங்குகள் எல்லாம் கண்களிலிருந்து நீர் வழிய அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

மஹாஞானியின் வாக்கிலிருந்து வெளிப்பட்ட இராம மந்திர இசை ஓசையில் ஆற்றின் சலசலப்பும் மரங்களின் இலைகள் அசைகின்ற ஓசையும் அடங்கிப் போய்விட்டன.

அதுவரை சிவாஜி அப்படிப்பட்ட இசையைக் கேட்டதே இல்லை. அவர் தாம் ஒரு மன்னர் என்பதையே மறந்தார்.

அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அப்படியே அமர்ந்து தன்னிலை மறந்தார்.

அது மட்டுமன்று. ஒப்பற்ற அந்த சீலரையே தம் மானசீக குருவாகவும் ஏற்கத் தொடங்கி விட்டார் சிவாஜி.

ஒரு நாள்.

அந்த மஹா ஞானி தனிமையில் இருந்தார். சிவாஜிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அவர் உடனே ஞானியை நெருங்கி அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். “குருநாதா! அடியேனுக்கு ஞான உபதேசம் செய்யுங்கள்!” என வேண்டினார்.

அப்போதுதான் அந்த ஞானியின் திருநாமம் ‘சமர்த்த இராமதாசர்’ என்பதை சிவாஜி அறிந்து கொண்டார்.

தகுதி உள்ளவர்கள் வந்து உபதேசம் செய்யும்படி கேட்டால் அதை மறுக்கக் கூடாது. உபதேசம் செய்ய வேண்டும்.

அதனால் சமர்த்த இராமதாசர் சிவாஜிக்கு இராம மந்திர உபதேசம் செய்து அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டார்.

குருநாதரை வணங்கிய சிவாஜி அவரிடம் இராம மந்திரத்தை இனிய இசையுடன் பாடக் கற்றுக் கொண்டார்.

ஒரு நாள்.

சிவாஜி சிறிதளவு படையுடன் சமர்த்த இராமதாசர் தங்கியிருந்த மாவுலி என்ற நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்.

அந்தத் தகவலை அறிந்த முகலாய மன்னன் ஔரங்கசீப் சிவாஜியைச் சிறைப் பிடிக்க ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான்.

இரவு நேரம் நெருங்கியது. பயணம் செய்து கொண்டிருந்த சிவாஜி காட்டிலேயே ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்கிவிட்டுக் காலையில் பயணத்தைத் தொடரலாம் எனத் திட்டமிட்டார்.

அதன்படியே காட்டில் ஆங்காங்கு கூடாரமிட்டுப் படைவீரர்கள் தங்கினார்கள்.

சிவாஜி மட்டும் தனிமையை விரும்பிச் சற்றுத் தள்ளியே கூடாரத்தை அமைத்து அதில் தங்கியிருந்தார்.

சமர்த்த இராமதாசர் கற்றுக் கொடுத்த இராமநாம மந்திரத்தை அப்போது சிவாஜி இனிய இசையுடன் பாடிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து..

ஔரங்கசீப்பின் பெரும் படை சிவாஜியையும் சிவாஜியின் படையையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது.

அது எதுவும் தெரியாத சிவாஜி மன்னரோ தன்னை மறந்த நிலையில் பக்திப் பரவசத்தோடு இராம மந்திரத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.

எந்த நேரமும் சிவாஜியும் அவரது படையும் கைது செய்யப்படலாம் என்ற அந்தச் சூழ்நிலையில்...

அந்த இரவு நேரத்தில்...

காட்டிலிருந்த குரங்குக் கூட்டங்கள் சிவாஜி மன்னரின் படைகளுக்கு உதவியாக முகலாயப் பெருஞ்சேனையின் மீது பாய்ந்தன.

முகலாயப் படை திகைத்தது. “இவ்வளவு பெரிய வானரக் கூட்டம் எங்கிருந்து வந்தது?” என்ற அதிர்ச்சியில் முகலாயப் படை சிதறிப் போய் சின்னாபின்னமாகி ஓடியது.

சிவாஜிக்கு விவரம் தெரிந்தது. ‘ஆஞ்சனேயரே வந்து தம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என உணர்ந்தார்.

அதனால் விடிந்ததும் விடியாததுமாகப் புறப்பட்ட சிவாஜி நேரே போய் சமர்த்த இராமதாசரைத் தரிசித்து வணங்கி நடந்ததையெல்லாம் அவரிடம் கூறினார்.

மஹா ஞானியான சமர்த்த இராமதாசரின் மகிமையை விளக்கும் மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது. ஆனால் இது நடந்தது காட்டில் அன்று!

வீர சிவாஜி மன்னரின் அரண்மையில் நடந்தது. ஒரு சமயம்...

வீர சிவாஜியைப் பார்ப்பதற்காக சமர்த்த இராமதாசர் அரண்மனைக்கு வந்தார். அந்த நேரத்தில்...

சமர்த்த இராமதாசரின் தலைமைச் சீடரான உத்தமர் என்பவர் அரண்மனை நந்தவனத்தில் இருந்த பழங்களைப் பறிப்பதற்காக சமர்த்த இராமதாசரிடம் அனுமதி கேட்டார். அதற்கு.. “நானே பறித்துத் தருகிறேன்” என்று சொல்லி கீழே கிடந்த கல்லை எடுத்துக் கனிகளின் மீது வீசினார் சமர்த்த இராமதாசர்.

அந்தக் கல் தவறுதலாக ஒரு பறவை மீது பட்டு பறவை துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது.

அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள், “இவர் பெரிய ஞானிதாம். ஆனால் கல்லை எடுத்து அடித்துப் பறவையைப் பரலோகம் அனுப்பிவிட்டாரே!” என்று பரவலாகப் பேசினார்கள்.

அதைக்கேட்ட சமர்த்த இராமதாசர் இராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை ‘ஜன்ஜூட்’ எனும் இராகத்தில் பாடினார்.

பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார்.

அந்தப் பறவை #உயிர் பெற்று அப்படியே #பறந்து ஓடியது.

ஹிந்துஸ்தானி இராகமான ‘ஜன்ஜூட்’ என்ற இராகத்தைப் பாடினால் எப்படிப்பட்ட நோயும் நீங்கும் என்பது இன்றும் நிலவி வரும் நம்பிக்கை.

கர்னாடக சங்கீதத்தில் அதே சாயலுடைய ‘செஞ்சுருட்டி’ என்ற இராகம், பக்தி பாவத்துடன் பாடப்படுமானால் மனோ ரோகங்களைப் போக்க வல்லதாக இருக்கிறது.

சமர்த்த இராமதாசர் இறந்துபோன பறவையை உயிருடன் எழுப்பிய தகவல் ஊரெங்கும் பரவியது.

அப்போது மாவுலி நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய மன்னனுக்கும் தகவல் தெரிந்தது.

அவன் மனைவிக்கு சித்தப் பிரமை உண்டாகியிருந்தது. அந்த முகலாய மன்னன் மாவுலி நகர ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைச் சாரும்படி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான்.

அப்படிப்பட்ட அந்த மன்னன்தான் சமர்த்த இராமதாசரைப் பணிந்து “என் மனைவியின் சித்தப் பிரமையைத் தீர்த்து வையுங்கள்!” என வேண்டினான்.

சமர்த்த இராமதாசரும் பார்த்தார். ‘இந்த மன்னனை நல்வழிப்படுத்த இஃது ஒரு நல்ல வாய்ப்பு' என்று எண்ணிய அவர்...

மன்னனின் மனைவி முன்னால் மூன்று மணிநேரம் ‘மால் கவுஞ்ச்’ என்ற இராகத்தில் இராம பஜனை செய்தார்.

மூன்றாவது மணியில் மன்னனின் மனைவி சித்தப் பிரமை நீங்கித் தெளிந்து எழுந்தாள்.

அவளையும் தன்னுடன் சேர்ந்து பாடச் செய்தார் சமர்த்த இராமதாசர்.

முகலாய மன்னன் வெட்கித் தலைகுனிந்தான். ஹிந்துக்களுக்குத் தான் இழைத்த அநீதிக்கு ஏதாவது பரிகாரம் செய்ய எண்ணி சமர்த்த இராமதாசரிடம் முறையிட்டான்.

#இராமதாசர், “மக்கள் #ஒருவரை #ஒருவர்சந்தித்துக் கொள்ளும்போது ‘#ராம்ராம்!” என்று #சொல்லிக் கொள்ள வேண்டும்” எனக் #கேட்டார்.

அன்று முதல் மஹாராஷ்டிர மாநிலம், மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள் #ஒருவருக்கொருவர் ‘ராம்! ராம்!’ எனச் #சொல்லிக் #கொண்டார்கள்.

மஹாஞானியான சமர்த்த ராமதாசரின் நல்லிசையால் அவர் பெற்ற இராம பக்தியால் வடதேசத்தில் ஒரு ஹிந்து சாம்ராஜ்ஜியமே நிறுவப்பட்டது.


Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 29

 யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள்????


தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது.

உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது.

அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம்.

இந்தத் திறன் அவர்களுக்கு தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்தத் திறமையை மனித முயற்சியால் உருவாக்கிக் கொள்ள முடியுமா? 

ஒரு ஆய்வறிக்கையில் யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாகத் திரட்டி, அந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்

தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஒரு மேதாவியாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணி முதலிலிருந்தே தன்னை தயார் செய்து கொள்கிறாள் என்பது புலப்பட்டது.

அவள் எப்போதும் பாடிக்கொண்டும் ஃபியானோ வாசித்துக் கொண்டும் இருப்பாள். கணவனுடன் சேர்ந்து சிக்கலான கணித வினாக்களை விடுவிக்க முயற்சி செய்வாள். தான் போகுமிடமெல்லாம் கணக்குப் புத்தகத்தை எடுத்துச் செல்வாள்.

கருவிலிருக்கும் போதே பயிற்சி கொடுத்தால் பிற்காலத்தில் குழந்தை மேதையாக ஆகும் என்று குழந்தை பிறக்கும் வரை விடாது கணிதப் புதிர்களை விடுவித்துக் கொண்டே இருப்பாள்.

கர்ப்பிணியின் உணவும் விசேஷமானது:

பாலில் பாதாம்பருப்பு முதலான கொட்டை வகைகளையும், பேரீச்சையையும் கலந்து உண்கிறாள். மதிய உணவுக்கு தலை துண்டிக்கப்பட்ட மீன், பிரெட், பாதாம்பருப்பு, மற்ற கொட்டை வகைகள் (nuts) சேர்த்த பச்சைக் காய்கறிக் கலவை (salads) ஆகியவற்றை உண்ணுகிறாள்.

மீன் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று நம்புகிறார்கள்; ஆனால், மீனின் தலை மூளைக்கு நல்லதில்லையாம். கர்ப்பிணிப் பெண்கள் மீன் எண்ணெய் உட்கொள்ளுவது யூத இனத்தின் வழக்கம்.

மீனின் சதைப் பாகத்தையும், எலும்பு இல்லாத பகுதிகளையும் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இறைச்சி சாப்பிடுவதில்லை. இறைச்சி, மீன் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது நம் உடலுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று நம்புகிறார்கள்.

உணவு உண்ணுவதற்கு முன் பழங்கள் சாப்பிடுகிறார்கள். முதலில் பிரெட், சாதம் போன்றவற்றை சாப்பிட்டால் தூக்கம் வரும்; அதனால் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்கள் சரிவர புரியாது என்கிறார்கள்.

சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNA வையும் பாதிக்கும்; இதன் காரணமாக அடுத்த தலைமுறை அறிவற்றவர்களாகவும் மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும்.

இதனால் இஸ்ரேல் நாட்டில் சிகரெட் புகைப்பது விலக்கப்பட்ட ஒன்று.

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? உலகின் மிகப் பெரிய சிகரெட் தயாரிப்பாளர் யார் என்று உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உண்ணும் உணவில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெற்றோர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளின் உணவும் அமைகிறது.

முதலில் பழங்கள், பாதாம்பருப்பு, பின்னர் மீன் எண்ணெய் என்ற வரிசையில்தான் குழந்தைகள் உணவு உட்கொள்ளுகிறார்கள்.

ஒவ்வொரு யூதக் குழந்தையும் 3 மொழிகள் – ஹீப்ரூ, அரபிக் மற்றும் ஆங்கிலம் – அறிந்தவர்களாக இருக்கிறார்கள்; குழந்தைப் பருவத்திலிருந்து   பியானோ, வயலின் முதலிய இசைக்கருவிகள் இசைக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டியது ஒரு கட்டாயம். இசைக்கருவி வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் IQ (intelligence quotient) வை அதிகரித்து,

அவர்களை மேதைகள் ஆக்கும்.

இசை அதிர்வுகள் மூளையைத் தூண்டிவிட்டு அதன் திறன்பாட்டை அதிகரிப்பதால்தான் யூதர்களிடையே மேதைகள் அதிகம் என்கிறார் ஒரு யூத விஞ்ஞானி.

முதல் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்புவரை குழந்தைகள் வணிகக் கணிதவியலை படிக்கிறார்கள். விஞ்ஞானப் பாடம் முன்னுரிமை பெறுகிறது. கலிஃபோர்னியா குழந்தைகளையும் யூதக் குழந்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் கலிஃபோர்னியா குழந்தைகள் 6 வருடம் பின்தங்கி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

யூதக் குழந்தைகள் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய உடல், மனம் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுகிறார்கள். இவ்விரண்டு விளையாட்டுக்களும் மனதை ஒருமுகப்படுத்தி துல்லியமான, நுட்பமான முடிவு எடுக்க உதவுகின்றன.

உயர் நிலைப்பள்ளியில் மாணவர்கள் விஞ்ஞானம் படிக்க அதிகம் விழைகிறார்கள்.

போர்த்தடவாளங்கள், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் செயலாக்கங்கள் (projects), புதிதாக பொருட்கள் செய்வது (product creation) என்று பல்வேறு முறைகளில் தாங்கள் படித்தவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். 

இந்தத் திட்டங்கள் உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்தொழில்நுட்ப கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

வணிகம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு இங்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்கள் கடைசி வருடம் ஒரு செயல்முறை திட்டத்தை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும்; 10 பேர்கள் அடங்கிய அவர்களது குழுமத்திற்கு இந்த செயல்முறை திட்டத்தில் 10 மில்லியன் யு.எஸ். டாலர் லாபம் கிடைத்தால்தான் அவர்கள் தேர்வு பெறுவார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே உலக வர்த்தகத்தில் பாதிக்கும் மேல் யூதர்கள் வசம் இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற லீவாய்ஸ் (Levis) பொருட்கள், இஸ்ரேல் பல்கலைக்கழக வர்த்தகம் மற்றும் புதிய பாணி உடை வடிவமைப்பு (business and fashion) ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

யூதர்கள் பிரார்த்தனை செய்யும்போது கவனித்திருக்கிறீர்களா? எப்போதும் தலையை அசைத்து அசைத்துப் பிரார்த்தனை செய்வார்கள். 

இப்படிச் செய்வதால் மூளை தூண்டிவிடப்பட்டு மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்குமாம்.

இவர்களைப் போலவே ஜப்பானியர்களும் சிரம் தாழ்த்தி வணங்குபவர்கள். சுஷி உணவை (புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் உணவு) விரும்பி உண்பார்கள். இந்த இரண்டு இனங்களுக்கும் பல ஒற்றுமை இருப்பதை தற்செயல் என்று சொல்லலாமா?

நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனம் அவர்களுக்குப் பலவகையில் உதவுகிறது. யாருக்காவது பயன்தரும் வர்த்தக யோசனை இருந்தால் வட்டி இல்லாக் கடன் கொடுத்து, அவர்களது வர்த்தகம் தழைக்க எல்லா வகையிலும் உதவுகிறது.

இதனாலேயே ஸ்டார்பக்ஸ், டெல் கம்ப்யூட்டர்ஸ், கோகோகோலா, DKNY, ஆரக்கிள், லீவாய்ஸ், டன்கின் டோனட், ஹாலிவுட் படங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான வர்த்தகங்கள் இவர்களது ஆதரவில் நடைபெறுகின்றன.

யூத மருத்துவப் பட்டதாரிகள் நியுயார்க்கில் அமைந்திருக்கும் யூதர்களின் வர்த்தக நிறுவனங்களில் வட்டியில்லாக் கடனைப் பெற்று தனியாக டாக்டர் தொழில் நடத்தலாம். இதனால் நியுயார்க், கலிபோர்னியா நகரங்களின் மருத்துவமனைகளில் போதுமான டாக்டர்கள் இருப்பதில்லை.

சிங்கப்பூரில் சிகரெட் பிடிப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டைப் போலவே இங்கும் சிகரெட் பிடிப்பது தீய பழக்கம் என்று கருதப்படுகிறது.

ஒரு சிகரெட் பெட்டியின் விலை 7 யு.எஸ். டாலர்கள்! அரசாங்கமும் இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் போலவேதான்.

சிங்கப்பூர் மிகச்சிறிய நாடு; மன்ஹாட்டன் அளவே இருந்தபோதும் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இங்கு இருக்கின்றன.

இந்தோனேஷியாவைப் பாருங்கள். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை வெறும் 0.70 யு.எஸ். டாலர்தான்.

எங்கு பார்த்தாலும் மக்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார்கள்.

பலன்?

லட்சக்கணக்கான மக்கள் தொகை இருந்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பல்கலைக் கழகங்கள்; பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய தொழில் நுட்பமோ, தயாரிக்கும் பொருட்களோ எதுவுமே இல்லை அவர்களிடம்!

அவர்களது மொழியைத் தவிர வேறு மொழி தெரியாது. ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ள அத்தனை சிரமப்படுகிறார்கள்.

இவையெல்லாம் சிகரெட் பிடிப்பதால்தான்.  சிகரெட் பிடிப்பவர்களின் அடுத்த தலைமுறை அறிவற்றதாகத்தான் இருக்கும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்... இந்த  ஆய்வறிக்கையில் ஒரு  இனத்தையோ, மதத்தையோ குறிப்பிடவில்லை.

நம்மால் யூதர்களைப் போன்ற புத்திசாலித் தலைமுறையை உருவாக்க முடியுமா?

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 28

 சித்த மருத்துவத்தில் நோய் பரவாமல் தடுக்க அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்:
*************

1. கைகளை பச்சை மஞ்சள், வேப்பிலை ( கிருமி நாசினி, நுண்ணுயிர்கொல்லி) இரண்டும் அரைத்து கலந்த நீரில் கழுவலாம்

2. குளிக்கும் வெதுவெதுப்பான நீரில் சிறுது மஞ்சள், வேப்பிலை அல்லது எலுமிச்சை சாறு கலந்து குளிக்கவும்

3. ஒரு சிறு வெள்ளைத்துணியில் மஞ்சள், அமுக்கரா, அதிமதுரம் பொடிகளை சம அளவில் கலந்து பொட்டணமாய் அடிக்கடி முகர்ந்தால் prophylactic ஆக செயல்பட்டு பிணி அணுகா வண்ணம் செய்யும்

4. உணவே மருந்து எனும் படி அன்றாட உணவில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், கொத்தமல்லி விதை, மிளகு, பெருங்காயம்

சேர்த்துக்கொள்ளுவதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்

5. ரசம் ஒரு அருமையான அருமருந்து. 

மிளகு ரசம், திப்பிலி ரசம் இவற்றை அருந்தலாம்.

மஞ்சளில் உள்ள curcumin  Anti-oxidant - நோய் எதிர்ப்பாற்றல் தூண்டக்கூடியது. 

மிளகின் piperin, பூண்டில் உள்ள கந்தகச்சத்து, புரத அமினோ அமிலங்கள் நோய் தடுப்பாற்றல் சக்தி கொண்டது.

திப்பிலி ரசம் முக்கியமாய் சுவாசக்கோளாறு, இருமலுக்கு மிக நல்லது.

6. நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் விட்டமின் 'சி'  நிறைந்த நெல்லிக்காயை சாறெடுத்தோ அல்லது தேனில் ஊற வைத்தோ உண்ணலாம்.  எலுமிச்சை, சாத்துக்குடி, மாதுளை பழங்களோ அல்லது அவற்றின் சாறுகளை தயாரித்து அருந்தலாம்

7. தேங்காய்பாலில் உள்ள "லாரிக் அமிலம், மோனோ லாரின் போன்றவை தாய்பாலிலும் காணப்படுவதால் உணவில் சேர்ப்பதால் குழந்தைகட்கு ஒரு அமிழ்தம் என்றே சொல்லலாம். 

8. உரை மாத்திரையை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகட்கு தாய்ப்பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் உரசி கொடுக்கலாம். மற்றும் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகட்கு தேனில் குழைத்து  கொடுக்க நோய் எதிர்பாற்றல் அதிகரிக்கும்

9. கற்பூரவல்லி இலைகளின் சாற்றுடன் தேன் கலந்து சுரசம் செய்து அன்றாடம் குழந்தைகட்கு கொடுக்க சுவாசப்பிரச்சனை வராது தடுக்கலாம்

10. வீட்டின் சுற்றுப்புறத்தின் காற்று மாசுபடுவதை தடுக்கும் துளசி, நொச்சி, கற்பூரவல்லி, வேம்பு செடிகளை வளர்த்தல் நலம்

11. மாலை வெயிலில் புற ஊதாக்கதிர்களின் ஆதிக்கம் குறைவாய் இருப்பதால்,  மாலை நேரத்து நடைப்பயிற்சி , விளையாட்டு நல்லது. வெயிலினால் கிடைக்கும் விட்டமின் ‘டி’ உடலுக்கு வலு சேர்க்கும் 

12. சளி,  மூக்கில் நீர் கசிதல், இருமல் அறிகுறி காணபட்டால் உடனே சுத்தமான வெள்ளைத்துணியினை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து காய வைத்து உலர்த்தி அதனை முகரலாம். வேப்பிலை, மஞ்சள் போட்டு வெது நீரில் வேது பிடிக்கலாம்

13. தேங்காய் எண்ணையை காய்ச்சி அதனுடன் இடித்த கற்பூரம் கலந்து உள்ளங்கை, முன் நெற்றி, மூக்கு, நெஞ்சுப்பகுதிகளில் தடவலாம்

14. தொண்டை வலி, சளி தென்பட்டால் திரிகடுகு சூரணத்தை தேனில் கலந்து சாப்பிடலாம்.  ஆடாதோடை மணப்பாகு (சித்த மருத்துவரின் தகுந்த ஆலோசனையுடன்) அருந்தலாம். 

15. சூரிய நமஸ்காரம், நாடி சுத்தி, தீர்க்க சுவாசம், திருமூலர் பிரணாயாமம், போன்ற மூச்சுப்பயிற்சிகளை அன்றாடம் செய்து வருவது நல்லது 

16. மன அழுத்தம், நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும். பயத்தை விட்டொழியுங்கள்.  மகிழ்வாய்,  மனதை இளகுவாய், குதூகலமாய்  வைத்துக்கொண்டாலே ஹேப்பி ஹார்மோன்களான எண்டார்பின், டோபமைன், செரடோனின்  போன்றவை நன்கு சுரந்து நோய்களை அடித்து துரத்தி விடும். 

“வருமுன் காப்போம் “ என்ற பொன் மொழிக்கேற்ப சித்த மருத்துவம் காட்டும் பிணி அணுகா விதி முறைகளை கடைபிடித்து சீரான வாழ்வு வாழுங்கள்! 

வானம் மட்டுமின்றி வாழ்வும் வசப்படும்!



Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 27

 How to save/invest

முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். நான் இன்வெஸ்ட்மெண்ட் ஆலோசகர் அல்ல. நான் இனிமேல் தான் அந்தப் பக்கமே போகப் போகிறேன். நிறைய நண்பர்கள் என்னிடம் முதலீடு எப்படி செய்ய வேண்டும் எனக் கேட்கிறார்கள். எனக்குத் தெரிந்தது எல்லாம் பழமையான முறைகள் தான். வீட்டு மனை அல்லது வீடு, தங்கம் மட்டும் தான்.

ஆனால் எனக்கு பணத்தை எப்படி சிக்கனமாக செலவழிக்க வேண்டுமென்று வாழ்க்கை, வாயில் சாணியில் முக்கிய செருப்பை கவ்வக் கொடுத்து, விளக்கமாறு பிய்யப் பிய்ய அடி கொடுத்து கற்றுக்கொடுத்திருக்கிறது. அதில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன். இது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. தவறுகளும் இருக்கலாம்.

1. உணவுக்கான செலவு நம் மாத வருமானத்தில் 20% ஐ தாண்டக்கூடாது. இது பேச்சிலர்களுக்கு அல்ல. குடும்பத்திற்கு. பேச்சிலர் எனில் 10-15% தான்.

2.உடைகளுக்கு பெரிய முக்கியத்துவம் தரத் தேவையில்லை. தேவைப்படும் இடம் /சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் நல்ல உடைகள் வாங்கிக் கொள்ளலாம். பிராண்டட் ஷோரூம், போத்தீஸ் போன்றவைகளுக்கு போகக்கூடாது. சென்னை என்றால் பாரிஸ் கார்னர், மதுரை என்றால் விளக்குத்தூண் போன்ற இடங்களில் வாங்கினால் அதே உடைகளை 40% குறைவான விலையில் எடுக்கலாம்.

3. மளிகைப் பொருட்கள் போன்றவை சில 6 மாதம் தாங்கும், சில 3 மாதம் தாங்கும். எங்கு விலை மலிவாக கிடைக்கிறது என கண்டறிந்து அங்கே வாங்கப் பழகிக்கொள்ள் வாண்டும். மொத்தமாக மொத்தக் கடைகளில் (இங்கிருந்து தான் ஏரியா கடைகளுக்கு பொருள் வரும்) வாங்கினால் 20-30% விலை குறைவாக இருக்கும்.

4. காய்கறிகளைப் பொருத்தவரை சீசனல் காய்கறிகளை வாங்குவதே சிறந்தது. வீம்புக்காக முருங்கைக்காய் கிலோ 400 ரூபாய் விற்கும் போது வாங்கி சாம்பார் வைக்கக்கூடாது. நாலு காய் 10 ரூபாய்க்கு விற்கும் போது வாங்கினால் போதும். அதே போல் பழங்களும். அதனதன் சீசனில் குறைவான விலையில் இருக்கும் போது வாங்கினால் போதும்.

5. மருத்துவ செலவு மிக முக்கியமான செலவாக மாறும் சூழலில் இருக்கிறோம். தினமும் வீட்டில் உள்ள எல்லோரும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி/உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொண்டால் அந்த செலவு குறையும். வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிபனுக்கு கொடு என்பார்கள். வைத்தியனுக்கும் கொடுக்காதே வாணிபனுக்கும் கொடுக்க வேண்டியதை மட்டும் கொடு என்பதே நம்மைக் காப்பாற்றும்.

6.பிரீமியம் என்பார்களே அதன் பக்கமே தலை வைக்கக் கூடாது. உதாரணமாக ஒரு படத்திற்கு முதல் நாள் டிக்கெட் 500 ரூபாய் எனில் மூன்றாம் நாள் 120 ரூபாய் தான். செயற்கைத் தட்டுப்பாட்டை நாம் ஊக்குவிக்கவே கூடாது.

7. தேவைப்படாத ஒன்றை வாங்கவே கூடாது. நாம் ஒரு பொருளை வாங்கிவிட்டால் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அடுத்த விநாடியே அது செகண்ட் ஹேண்ட் ஆகிவிடும். ஒரு முறைக்கு இரு முறை யோசித்து, இதை வாங்குவதால் நமக்கு ஏதாவது வேலை நேரம் குறையுமா, இப்போது இருக்கும் பிராசஸையே சிக்கனமாக இதில் செய்ய முடியுமா? என ஆராய்ந்து வாங்க வேண்டும்.

8. சிறுக கட்டி பெருக வாழ் என்பார்கள். அதாவது மிக ஆடம்பரமாக பெரிய அளவில் வீடு கட்டி, அதன் மெயிண்டனன்ஸ் போன்றவற்றிற்கு சிரமப்படுவதை விட அடக்கமாக தேவையான அளவில் கட்டிக்கொள்வது நல்லது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தாங்கள் வாழும் ஊரில் நிச்சயம் ஒரு சொந்த வீடு சிறியதாகவாவது அவசியம். ஏனென்றால் ஓய்வு பெற்றாலோ,வருமானம் குறைந்தாலோ,வேலை இழப்பு ஏற்பட்டாலோ மற்ற செலவுகளைக் குறைத்து சாப்பாட்டு செலவோடு நிறுத்தி, அடுத்த வாய்ப்பு தேடலாம். வாடகை குறைக்க முடியாத ஒன்று.

9.விலை மதிப்பு குறைவாக உள்ள இடங்களில் வீட்டு மனை வாங்கி, பின்னர் பேங்க் லோன் எடுத்து அடக்கமாக வீடு கட்டிக்கொள்வது நல்லது. கடனுக்கான ஈ எம் ஐ கட்டி முடிக்கும் போது நமக்கு அது ஒரு நல்ல சொத்தாக இருக்கும். அத்தனை வருட வாடகையும் மிச்சம். அபார்ட்மெண்ட் வாங்குவதின் சாதக/பாதகங்கள் இன்னும் விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது.

10. திருமணத்தில் பெரிய செலவு கூடாது. பெரும்பாலான நடுத்தர குடும்பங்கள் நொண்டியடிக்க திருமண செலவு ஒரு பெரிய காரணியாக இருக்கிறது. சிம்பிளாக திருமணம் செய்துவிட்டு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒரு விருந்து ஏற்பாடு செய்வது நல்லது. ஆனால் இதை சமூக காரணங்களுக்காக இரு வீட்டாரும் ஒத்துக் கொள்வதில்லை. எப்படியாகினும் சுருக்கமாக செய்து கொள்வது நல்லது.

11. வீட்டில் ஆளாளுக்கு ஒரு ரூமில் பேன்,லைட் போட்டு மொபைல் பார்ப்பது, வெவ்வேறு நேரங்களில் சாப்பிடுவது, சமைப்பது, சூடு பண்ணுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சிறுதுளி தான் பெருவெள்ளம். நம் பொருள் வீணாவதும் குறையும், மானிடர் அனைவருக்கும் பொதுவான வளத்தையும் நாம் பாதுகாப்பது போலவும் ஆகும்.

12.சிக்கனமாக இருப்பதை பலர் கிண்டல் செய்வார்கள். அதை காதில் வாங்கிக் கொள்ளவே கூடாது. நமக்கு ஒரு சிக்கல் வந்து பணத்திற்காக யாரிடம் கையேந்தி நிற்பதை விட சிக்கனமாய் இருப்பது தவறொன்றுமில்லை.

13. ஒன்றிரண்டு வருடங்கள் சேமிப்பதை ஒரு நல்ல தொகையாக வங்கியிலோ, தங்கமாகவோ மாற்றி விட்டால், நமக்கே ஒரு கான்பிடன்ஸ் வரும். சேர சேர பணம் தன்னை தானே வளர்த்துக் கொள்ளும் சக்தியுடையது.

35 வயது வரை இப்போது நான் சொன்னவற்றிற்கு எதிரிடையாகவே நடந்து வந்தேன். பின்னர் உணர்ந்து,கடந்த 10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டுடன் நடந்து, பழைய கடன்களை அடைத்து இப்போது லெவல் ஜீரோவிற்கு வந்திருக்கிறேன். திரும்பிப்பார்த்தால் இப்போது புதிதாக வேலைக்கு சேர்பவரிடம் என்ன சேமிப்போ அதுதான் என்னிடம். என்ன இரண்டு குழந்தைகளை வளர்த்திருக்கிறேன். அவ்வளவு தான். ஆனால் முதல் 15 ஆண்டுகள் நான் ஒழுங்காக இருந்திருந்தால், இப்போது என் செட் ஆட்களோடு பொருளாதாரத்தில் சரிக்கு சமமாய் நின்றிருப்பேன்.

அந்த ரேஸில் நான் பின் தங்கி விட்டேன். என்னிடம் ஆலோசனை கேட்கும் நண்பர்களுக்கு சொல்லப்போவது அதுதான். ரேஸில் பின் தங்கி விடாதீர்கள்

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 26


பணி முடிந்து வீடு திரும்பும்போது வழக்கமாக  அந்த முதிய பெண்மணியிடம் தான் காய்கறி வாங்குவது வழக்கம். நான் வருவதற்கு முன் வேண்டிய யவை ரெடியாக வைத்து விடுவாள் .

அன்று மிகவும் சோகமாகவும் களைப்பாகவும் இருந்தாள்.

என்ன ஆயா! சுறுசுறுப்பே இல்ல !ரொம்ப சோகமா உட்கார்ந்து  இருக்கே! ஏன்! என்று கேட்டேன் .

பொண்ண ஆசுபத்திரிலே சேர்க்கணும் ! பிரசவம் இன்னைக்கோ  நாளைக்கோ தெரிலே அப்பா! என்றாள்.

சட்டென்று ஏன் பையில் எப்பொழுதும் அவசரத்திற்க்காக வைத்திருக்கும் ஆயிரம் ரூபாயை அவளிடம் நீட்டினேன்.

ஆயா! அவசரத்துக்கு வச்சுக்கோ! அப்புறம் பாக்கலாம்! என்று  சொல்லிட்டு போய்ட்டேன் .

அதற்குள் சனி,ஞாயிறு விடுமுறை கழிந்து திங்கள் மாலை வந்தேன்.

ஆயா இல்லை! வேறு ஒரு பெண் இருந்தாள்..ஆனால் என்னுடைய  காய்கறிப் பை ரெடியாக இருந்தது.

ஐயா ! உங்க கூட்டரை பார்த்ததும் தெரிஞ்சிக்கிட்டேன்! இந்தாங்க  உங்க காய் ,ரெடியா கட்டி வச்சுட்டேன் ! என்று கொடுத்தாள்.

ஐய! மறந்துட்டேன் ! என்று சொல்லி ரெண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து" ஆயா உங்க கிட்ட கொடுக்கச் சொல்லிச்சு " என்று கொடுத்தாள் அந்த பெண்மணி .

என்னம்மா !ஆயாவுக்கு என்ன ஆச்சு ! என்றேன்

"ஆயா ஆசுபத்திரிலேதான் இருக்கு! இன்னம் பொண்ணுக்கு பேறு காலம் இன்னம் ஆவலே" என்றாள்

அந்த ரூபாய் நோட்டுக்களை பார்த்தேன் !.நான் கொடுத்த அதே ரூபாய்கள்தான்! எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகப் போய் விட்டது.

அதற்குள் பக்கத்துக்கு கடை பெண்மணி என்னிடம் பேசுவதற்கு  சைகை செய்தாள்.

" நீ அன்னைக்கி நோட்டை கொடுத்துட்டு கூட்டர்லே ஏறி போயிட்டே!

ஆயா அத்தே கைலே வச்சிக்கிணு ரொம்ப நேரம் உக்காந்துகினு இருந்தது!

வழக்கமா வாடிக்கையா ரொம்ப நாளா காய் வாங்கிக்கினு போறாரு !

அவர் கைலெல்லாம் கடன் வாங்கினா மருவாதே இல்ல !அவர்  வருவாரு !இத்தக் கொடுத்திடுன்னு சொல்லிட்டுப் போச்சு !செலவு பணத்துக்கு நான் ஏற்பாடு செய்திட்டேன்" என்றாள் .

நினைத்தேன்! அன்றாடம் கஷ்டப்பட்டு ஜீவனம் செய்யும் ஒரு வயதான பெண்மணியின் வைராக்கியம் ,கவுரவம் என்னை பெருமையுடன் சிலிர்க்க வைத்தது!

சிறிது யோசனை செய்தேன்! பிறகு அந்தப் பெண்மணியிடம்

"தப்பா நெனச்சுக்காதே ! இந்தப் பணத்தை நீ கொடுத்ததாக இருக்கட்டும் .என்று சொல்லி இன்னும் ஒரு ஆயிரம் சேர்த்துக்  கொடுத்தேன் அவளிடம் .

இதை அவளிடம் கேட்காதே ! நீயும் எனக்குத் தரவேண்டாம் " என்றேன்.

அந்தப் பெண்மணி கொஞ்ச நேரம் யோசனை செய்தாள் .பிறகு என்னைப் பார்த்தாள்.

யப்பா! உனக்கு ரொம்ப நல்ல மனசு! பிள்ளை குட்டியோட எப்பவும்  சந்தோஷமா இருப்பே! இந்த பணம் தேவை இல்லே ! நான் கொடுத்திட்டேன் ! எப்படியாச்சும் எங்க செலவே நாங்க சுதாரிச்சுருவோம்" என்று என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள்.

நான் மிகவும் அசந்து போய்ட்டேன் .

என்ன வில் பவர்! என்ன தன்னடக்கம் கலந்த சுய கவுரவம் !

தன் மானமும் மனிதநேயமும் இங்கே தலை நிமிர்ந்து வாழ்கிறது !

சட்டென்று என் நண்பன் ஞாபகம் வந்தது .இதே மாதிரி அக்ஷய திருதிநாள் . அவனிடமிருந்து போன் வந்தது ."நான் டிநகர்லே நகைக்கடையிலிருந்து பேசறேன் .பணம் போறலே ! கிரெடிட் கார்டும்

வேல செய்யலே ! உடனே அட்லீஸ்ட் பத்தாயிரம் ரூபாயோட வந்து  என்னைக் காப்பாத்து! என்றான் .

நான் என் மனைவியிடம் கூட சொல்லாமல் ஓடினேன்! வருஷம்  இரண்டாகி இப்போ மூணாவது அக்ஷய திரிதி கூட போயாச்சு !

அவனும் பணத்தைப் பற்றி வாயத் திறக்கலே ! நானும் கேட்டால் கவுரவ குறைவு என்று கேட்க்காமே இருக்கேன்! இது வசதி படைத்தவர்கள் விவகாரம் ! மௌனமான வேதனைகள் !

அன்று இரவு என் மனைவியிடம் காய்கறி ஆயாவைப் பற்றி  சொன்னேன்.மனைவி உடன் சொன்னாள்.

என்ன தயக்கம் !நேரா ஆஸ்பத்ரிக்குப் போவோம் .நான் விசாரிக்கிறேன் அங்கு ஆகும் சிலவை நாம் அவளுக்குத் தெரியாமல் கட்டி விடுவோம். வாருங்கள் .என்றாள் .

என் மனைவிக்கு எனக்கு மேல நல்ல மனசு ! வாழ்த்தினேன் .

ஆஸ்பத்ரிக்குப் போனோம். பாவம் அந்தப் பொண்ணுக்கு சிசைரின் வேற !எல்லா பில்லுக்கும் என் மனைவி விசாரித்து செட்டில்  பண்ணிவிட்டு ,அவர்களிடம் ஆயா வந்து கேட்டால் இலவச சேவை மூலம் கட்டி விட்டார்கள் என்று சொல்லச் சொல்லி ரிக்வஸ்ட்  பண்ணிவிட்டு வந்து விட்டாள் .

ஒரு வாரம் சென்றது ! கடையில் மறுபடியும் ஆயா உட்கார்ந்திருந்தாள் .என்ன ஆயா! சௌக்கிமா இருக்கயா ! மகளுக்கு பேரனா இல்ல பேத்தியா! என்றேன் .

பேரன் பொறந்திருக்கான் அப்பா ! ஆபரேஷன் பண்ணி எடுத்தாங்க!எல்லாம் நல்லா இருக்காங்க !

யாரோ ஒரு புண்ணியவதி ! மகராசி ! மொத்த செலவையும் கட்டிட்டுப்  போய்ட்டாங்களாம் ! அவங்க குடும்பத்தோட நல்லா இருக்கணும் ! என்றாள் .

ரொம்ப சந்தோஷம் ஆயா ! என்று சொல்லி வழக்கமான என் காய்கறிப் பையை தூக்கினேன் .எப்பொழுதையும் விட சற்று கனமாகி இருந்தது! திறந்து பார்த்தேன் ! வழக்கத்தை விட அதிகமான காய்கறி !

தவிர கட்டாக ஒரு மல்லிகை பூச்சரம் சுற்றி வைக்கப் பட்டிருந்தது .

என்ன ஆயா ! இது என்னோட பையா! என்றேன்

ஆமாம் அய்யா! உன்னோடதுதான் ! அந்த பூ பையே உங்க வீட்டுக்கார அம்மா கைலே கொடு ! அவங்க எப்பவும் சந்தோஷமா உன்னோட இருக்கணும்! அவங்க செஞ்ச உபகாரம் என் குடும்பம் என்னைக்குமே  மறக்காது!

என்ன ஆயா! என்னவெல்லாமோ சொல்றே!ஆமாம் ராஜா! உன் வீட்டுக்கார அம்மாதான் எல்லாத்தையும் ஏத்துக்கிட்டாங்க ன்னு முதல்லே தெரியாது! அப்புறம் விசாரிச்சு தெரிச்சுக்கிட்டேன் ! என்றாள்

நான் திகைத்துப் போய்விட்டேன் .பிறகு இப்படியே இது தொடராக கூடாது என நினைத்து

சரி ஆயா! என் மனைவிதான் வந்தாங்க! ஆனா நாளையிலிருந்து நீ  வழக்கமா கொடுக்கிற காய்தான் கொடுக்கணும்.சரியாய் சில்லறை  வாங்கிக்கணும். அதிகமா எல்லாம் கொடுத்தீன்னா அப்புறம் நான்

இங்கே வர மாட்டேன்.உன்ன எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சரி ராஜா ! அப்படியே செய்றேன் !வராம கண்டி இருந்திராதே ! என்றாள்.

வீட்டிற்கு வந்து மனைவியிடம் சொன்னேன்.

என் மனைவி ரொம்ப ஆச்சர்யப் பட்டாள். வாவ் ! வாட் எ கிரேட் லேடி ! என்ன பெருந்தன்மை! என்று அந்தப் பூச்சரத்தை அப்படியே சாமி  படத்தில் அலங்காரம் செய்து அவளுக்காக வேண்டிக் கொண்டாள்.

பிறகு என்னிடம் என்னங்க! நாளை மாலை நேரா அங்கே போகாதீங்க !

வீட்டிற்கு வந்து என்னையும் கூட்டிக் கொண்டு போங்க " என்றாள் .

மரு நாள் மாலை! நானும் மனைவியும் ஆயா கடைக்குப்  போனோம்.ஆயா என் மனைவியைப் பார்த்ததும்

வாம்மா தாயி!நீ நல்லா இருக்கணும் !ஐயா கூட சௌக்கியமா  சந்தோஷமா இருக்கணும் ! எவ்வளவு பெரிய உபகாரம் செஞ்சிருக்கே !

என வாயார வாழ்த்தினாள் .

என் மனைவி சொன்னது " ஆயா! நான் வேத்து மனுஷியா இதை  செய்யலே! உனக்கு மூத்த பொண்ணு என்ன செய்யுமோ அதைத்தான்  செஞ்சேன் ! ஆனா நாளைலே இருந்து வழக்கமான காய்தான்

கொடுக்கணும் ! மேல்கொண்டு எதையும் தரக் கூடாது ." என்று சொல்லி என்னிடம் என்னங்க! ஸ்கூட்டரை விட்டு ஒரு நிமிஷம்  இங்க வாங்க " என்று சொல்லி

ஆயா! எங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணுங்க ! என்று சொல்லி அவள் காலடியில் வணங்கினோம்.

ஐயோ ! என்னம்மா இது! இப்படியெல்லாம் பண்ணைக் கூடாது அம்மா!

என்று ஆயா பதைபதைத்து கண்களில் நீர் பெருக

நெடு நாள் நல்லா இருங்க ஐயாவும் அம்மாவும் " என்று வாழ்த்தினாள் .

என் மனைவி சொன்னாள். " வணங்கி ஆசீர்வாதம் பெற உன்னைவிட பெரிய உயர்ந்தவர்கள் எங்களுக்கு தெரியாது .உன்னோட அன்பான  வாழ்த்துக்கள்தான் எங்களுக்கு தேவை " என்று சொல்லி

"வாங்க போகலாம் " என்று கிளம்பி விட்டாள்.

கண்ணீர் மல்க வாயடைத்து ஆயா அப்படியே உட்கார்ந்திருந்தாள் .

தூய்மையும் பெருந்தன்மையும் உள்ள மனித நேயம் ஒன்று  மெய்சிலிர்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

அவளுடைய அருமையும் அப்பழுக்கற்ற பெருந்தன்மையும் உயர்வும்

எவ்வளவு அபூர்வமான எளிதில் காணப் படாத ஒன்று என்பது அவளுக்குத் தெரியாது !

நாங்க வீட்டுக்குப் போகிற வழியில் உள்ள ஒரு கோவிலுக்குப்  போனோம் .

வலம் வந்து வணங்கிவிட்டு வெளியில் வரும்போது என் மனைவி பக்கம் கை கூப்பினேன். என்னங்க!சாமி அங்கே இருக்கு! என்னைப் பார்த்து எதுக்கு  கும்படறீங்க! என்ன ஆச்சு உங்களுக்கு! கோவிலில் தெய்வத்தை தவிர  வேறு எதையும் வணங்கக் கூடாது! இது தெரியுமில்ல !

நான் சொன்னேன்."எனக்கு நல்ல தெரியும்! இறைவன் எங்கும்  நிறைந்தவன்.உன் பக்கத்திலும் இருக்கிறான்.உனக்குள்ளும் இருக்கிறான்  இவ்வளவு நல்ல உபகாரமும் அன்பு உள்ளம நிறைந்த உன்னிடத்தில்  நான் அந்த இறைவனைப் பார்க்கிறேன் !💗💗.

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 25

 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” 

ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம் 

 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” 

பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. 

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாகச் செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

எனப் பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.


“வேகமாக ஓட்டுவதற்கு"  என்ற பதிலைச் சொன்ன மாணவனைப் பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். 

அந்தப் பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. 

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. 

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்ட முடியாது. 

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாகச் செல்வதற்கான தைரியத்தைக் கொடுக்கிறது.

இதுபோலத் தான்  தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தைக் குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதைச் சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம். 

ஒரு போட்டித் தேர்வு எழுதுகிறோம். வறுமை நிச்சயமாக ஒரு தடையாகத் தான் இருக்கும். வசதி இருப்பவர்கள் கோச்சிங் சென்டர் சென்று கற்றுக் கொள்வார்கள். வறுமையைத் தடை என நினைத்துக் கொண்டிருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும். 

ஆனால் நான் வறுமையிலிருந்து மீள வேண்டும் என்ற வேகம் மனதுக்குள் துளிர்க்கும் போது வாழ்க்கைப் பயணமும் மகிழ்வானதாக மாறி விடும். அப்படி உருவாகும் வேகத்தால் தடைகளைத் தாண்டிச் செல்லும் சிலரைத் தான் சாதனையாளர்களாக ஆங்காங்கே ஒளிர்கிறார்கள்.

ஆயுர்வேதத்தில் விஷ மூலிகைகளை நானோ துகள்களாக உடைத்து அதனை உயிர்காக்கும் மருந்தாகச் செய்யும் முறை இருக்கிறது. தடைகளை சிறு துகள்களாக உடைக்கும் போது அவைகள் உங்களை வேகப்படுத்தும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.


வெற்றி நிச்சயம்.

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 24

 ''எது தேவை..? எது தேவையற்றது...?
.......................................................


மனதில் குடி கொண்டிருக்கும் துன்ப, துயரங்களை சரி செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா...? அப்படியானால் முதலில் அவைகளை உங்கள் தலையில் இருந்து இறக்கி கீழே வையுங்கள் போதும்.

அவற்றைக் கீழே வைத்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா...? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.... 

பெரும்பாலும் துன்பம் என்பதே, அதை நீங்கள் தூக்கித் தலையில் வைத்திருப்பதால் தான் வருகிறது என்பது தான் மெய்...

"வாழ்க்கைப் பயணம் இனிமையாக அமைய, மனதில் உள்ள சுமைகளைக் குறைத்துக் கொண்டால், மகிழ்ச்சி கூடும்,''

சென் (zen) துறவிகள் இருவர், தொடர்ந்து பெய்த மழையினால் ஒரு குடிசையின் கீழ் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தனர்.

மழை நின்றதும் தங்களது இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் போது, வழியில் ஓர் அழகான இளம்பெண் சாலையைக் கடக்க இயலாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

இதைக் கண்ட துறவிகளில் இளம் துறவி ஒருவர், என்னவாயிற்று பெண்ணே...? ஏதேனும் உதவி தேவையா...? என்று கேட்டார்...

பதிலுக்கு அந்தப் பெண்,

நான் எனது தோழியின் திருமணத்துக்குச் செல்கின்றேன். ஆனால், இந்தச் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது, நடந்து சென்றால் உறுதியாக என் "அழகிய பட்டாடை பாழாகி விடும்" என்று கூறி வருந்தினாள்...

"கவலை கொள்ளாதே பெண்ணே!, என் தோள்களின் மீது ஏறிக்கொள். 

நீ சேர வேண்டிய இடத்தில் உன்னைச் சேர்த்து விடுகின்றேன்" என்று கூறி விட்டு அவளுக்கு உதவி புரிந்தார்...

திரும்பி வரும் வழியில் தன்னுடன் இருக்கும் மற்றொரு மூத்தத் துறவி சற்றுக் கோபமாக இருப்பது போல அவருக்குத் தோன்றியது...

''ஏன் என் மீது கோபமாக உள்ளீர்கள்...?'' என்று கேட்க, அதற்கு அவர்.,''நாம் ஒரு துறவி என்பதை மறந்து விட்டு அந்தப் பெண்ணை எப்படி நீங்கள் தொட்டுத் தூக்கலாம்...? இது தவறானது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா...?" என்றார்.

அதற்கு, உதவி செய்த அந்த இளம் துறவி,

"தூக்கிய அந்தப் பெண்ணை அப்போதே நான் இறக்கி விட்டேன்", நீங்கள் தான் அந்நிகழ்வை மனதில் இருந்து இன்னும் இறக்காமல் சுமந்து கொண்டே இருக்கிறீர்கள்...

இப்படித் தான் நாமும் நமது வாழ்வில், பிறர் ஏற்படுத்திய காயங்களை மனதில் சுமந்து கொண்டு செல்கின்றோம்...

"அன்பை மட்டுமே நேசியுங்கள்" என்று கூறி விட்டுச் சென்றார்...

ஆம் என் அன்பிற்குரியவர்களே...!

அனைத்தையும், "தனக்கு, தனக்கு' என, வண்டி வண்டியாய் குப்பையை சேர்த்துக் கொண்டு அல்லலுறுகின்றனர்...

அந்தக் குப்பைகளை தூக்கி எறிந்து விட்டால், மனம் தெளிவாகும். வாழ்க்கை என்ற பயணம் இனிமையாக அமைய, சுமைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்...

நமக்கு அடுத்த நாழிகைகள்  உறுதியாக இல்லை...!

மனதில் தேவையற்ற அழுக்குகளை சுமக்க வேண்டாமே....!

எது தேவை....? எது தேவையற்றது...? என்பதைப் பகுத்துப் பார்க்கத் தெரிந்து விட்டால், நம்முடைய வாழ்வும் என்றென்றும் மகிழ்வாக இருக்கும்...

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 23

 அப்பா........🙏🙏🙏🙏🙏🙏🙏


சக்திவேல்  எழுபது   வயதைக் கடந்த தாத்தா.  ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார். 

பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம்.  

மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.  

இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார்  சக்திவேல். 

வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல்,  பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது.  

அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.   

அந்த சமயத்தில் ஒருவர் சக்திவேலின்  பக்கத்தில் 

வந்து அமர்ந்தார்.

"மிஸ்டர் சக்திவேல்!  

நான் தான் கடவுள்.  உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).

ஆச்சரியப்பட்டார் சக்திவேல்.  

யோசித்தார்.  

பிறகு பேசினார்.

""கடவுளே!  என் அப்பாவை நான் பார்க்க வேண்டும்.  அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?""

என்று கேட்டார் சக்திவேல்..

""மிஸ்டர் சக்திவேல்!  நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு.   இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.

''கடவுளே!  ஆம். ... அவருக்கு நிகர் யாருமில்லை'' என்றார் சக்திவேல்..

‘அப்படியா!' என்றார் கடவுள்.

''அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார்.  தண்டித்திருக்கிறார்.  அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும்.  மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன்.  ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது.  அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் சக்திவேல்.

''அதெல்லாம் சரி!  

உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?'''

என்று கேட்டார் கடவுள்.

‘அப்பாவா? அம்மாவா?இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை.  திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார்.  ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை.  அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்''', என்றார் சக்திவேல்..

''சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்

''என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து  விடுவார்.  ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.  

அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர்.  ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார்.  

நான் என் மகனை அவனது  பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக  உருவாக்குவேன்.  

ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா?  உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?''

என்று கேட்டார் சக்திவேல்.   

அமைதியானார் கடவுள்.  

மீண்டும் சக்திவேல் பேசினார்.

''‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரை  விட்டார் தசரதன், 

இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன், 

பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர்.   

இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம்.  அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'.  

ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன்.  ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை.  அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் சக்திவேல்.

ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள்.   

'''‘ம்..... மேலே சொல்'' என்றார் கடவுள்.

''ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன்.  பக்கத்தில் ஒரு பெண்.  என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார்.  

அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன்.  ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது.  

அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது.  என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன்.   வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார்.  அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது.   

அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார்.  கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார்.  அது ஒரு இன்ப அதிர்ச்சி.  பஸ் கிளம்பியது.  அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள்.  

அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.  எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார்.  அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன்.  மோதிரத்தை அவரிடம் காட்டினேன்.  அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை.  ''நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு''என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார்.  

வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் சக்திவேல்..

''அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் கடவுள்.

சிரித்தார் சக்திவேல்.

‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை.  ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள்.  

அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன்.  ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை.  

அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.    

எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது.  அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் சக்திவேல்..

கடவுள் சிரித்தார்.  

‘கடவுளே!  அப்பா என்பது உன்னதமான உறவு.   நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு.   

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் 

அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் சக்திவேல்.

':அதெல்லாம் சரி!  அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.

‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன்.  நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து  வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று.  அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம்.  அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது சக்திவேலுவின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது.  

‘மிஸ்டர் சக்திவேல்!  நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.  

இதோ அப்பா நிற்கிறார்.  இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார்.  பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.

சக்திவேல் ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார்.  இருவர் கண்களிலும் கண்ணீர்.

''மகனே!  என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? 

என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா.  

மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் சக்திவேல்.  

அப்பா பேசினார்.

''ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா?  

அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான்.  

அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.  இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.

‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் சக்திவேல்.

‘அது முடியாதுப்பா!   என்னோட கதை முடிந்த கதை.  வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய்.  அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய்.  அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான்.   இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும்.  அது நல்ல குழந்தைகளை உருவாக்கும்.  இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது.  நான் பாக்கியசாலி.  நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.    

 சக்திவேல் அழத்தொடங்கினார்.

‘என்ன மிஸ்டர் சக்திவேல்!  போதுமா?  நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.

‘கடவுளே!  நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது.  கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா.   

நான் அழத் தொடங்கினேன்.  யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை.   

அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு....   

அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.    

நிச்சயமாக அவரும் அழுதிருப்பார்.  ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார்.என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.  அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன்.  இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்'.  

சக்திவேல் மீண்டும் பேசினார்.

‘கடவுளே!  இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன்.  என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.  

இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.   அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும்.  அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் சக்திவேல்..

  ( சக்திவேலுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும்   மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட  அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது.   அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம்)

ஆகவே அப்பா.............. இருந்தால்.................... மதியுங்கள்.................... 

அப்பா........................ இல்லையேல்....... ..........

நினையுங்கள்..... ............

ராம்கி.....................

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 22

உணவை தான் உண்டேன் 
எப்படி. மலம்  ஆனது?
உயிரோடுதானே இருந்தேன்
எப்படி மாண்டு போனேன்?
மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான்  வாழ்வாய் இருந்ததா?


இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?

இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை  கண்கள் வட்டமிட்டது?

பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?

இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று  மனைவியும் சுற்றமும் பேசியது. எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !

நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது.

இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய  பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன்.

காலம் கடந்த ஞானம்.  பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?

பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்? சந்தனத்தால்  மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?

கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,  காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும் , பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் ! 

பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு ,    மண் என்னைப்பார்த்து  , 

" மகனே ! நானிருக்கிறேன் .என் மடியில் வந்து உறங்கு" என்று  என்னை மார்போடு தழுவிக்கொண்டது. 

அருந்தின மலமாம் 

பொருந்தின அழுக்காம்   வெறுப்பன உவப்பாம் 

உவப்பன  வெறுப்பாம் 

உலக பொய் வாழ்க்கை நீநீயாகஇரு...

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால்  வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

நான்... நான்... நான்...

நான் சம்பாதித்தேன்,

நான் காப்பாற்றினேன்,

நான் தான் வீடு கட்டினேன்,

நான் தான் உதவி  செய்தேன்,

நான் உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!

நான் பெரியவன்,

நான் தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

நான்  நான்  நான்  நான்  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

நான் தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

நான் தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

நான் தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். 

 உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.

உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.

எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது

உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்

உனக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.....

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 21

 ஒரு யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.

இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.

அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது என்றார் வெற்றி பெற்ற ராஜா.

விளிம்பு வரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்."

அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மைல் தூரம் கொண்டு செல்ல வேண்டும்.

கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள் வந்துக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு துளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச்  சீவி விடும்.

வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை."

என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.

குறிப்பிட்ட நேரம் வந்தது.

இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.

போர் வீரர்கள் சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர்.

பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது. 

ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்சாகப் படுத்தினர்.

மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர்.

இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக் கொண்டிருந்தனர்.

பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.

எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை வெற்றியோடு ஓடி🏃 முடித்தான் இளவரசன்.

இளவரசனை பாராட்டிய பேரரசர்,

இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.

உன்னை உற்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம்.

அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்?

என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை,

தூறுபவர்களையும் நான் பார்க்கவில்லை. 

"எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது."

விடுதலையோடு கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார்.

இளவரசனே,

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள ஆன்மா

வாழும் நாட்களிலே உன் ஆத்மாவில் கண்ணும் கருத்துமாக இருந்து (எதற்காக படைக்கபட்டோமோ அதை முடித்து) கடைசியில் அதை *சிருஷ்டிகர்த்தாவிடம்ஒப்படைக்க வேண்டும்.

(இறைவனடி சேர வேண்டும்)

போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாதே.

தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாதே.

ஆத்மாவில் கவனம் வை.

(இறைவனால் இப்பிறவியில் உனக்கு கொடுக்கபட்ட வேலையில் கவனம் வை)

என்றார்.✨

Digital worlds ல் உலவும் வாழ்க்கைத் தத்துவங்கள் - 20

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்... 

உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்…

பல வரிகள் மிக மிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை.

⚜ சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?

🙌 இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.

⚜ சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?

🙌 இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)

⚜ சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?

🙌 இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.

⚜ சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….

🙌 இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)

⚜ சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?

🙌 இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.

⚜ சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?

🙌 இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.

⚜ சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?

🙌 இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.

⚜ சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?

🙌 இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.

⚜ சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.

🙌 இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும்.